கல்லறைச் சேவகனாய்...!
தேடிய கண்கள்
சோர்ந்து விட்டன
தொடர்ந்த கால்கள்
தளர்ந்து விட்டன
காலமெல்லாம் தொடருவேன்
காதலுடன் என்றவளே
கண் மூடி துயிலுகிறாய்
கல்லறைக் கட்டிலிலே...
இரண்டாம் நிழலாய்
எப்போதும் நீயென
நினைத்தே இருந்தேன்
பணமென்னும் இருட்டில்
தொலைந்த நிழல்களாய்
நீயும் என் காதலும்...
படிப்புக்கேற்ற வேலையென
தேடித்தேடித் திரிந்தேன்
கிடைத்தது என்னவோ
வேலையின்மையும்
நீயில்லா வெறுமையும்...
கற்றேன் காதலை
முதலும் கடைசியுமாய்
உன் கல்லறையில்...
காத்திருத்தலின் வலி
என்னவென்று உணர்த்தியவளே
காலமெல்லாம் கழித்திடுவேன்
உன் கல்லறைச் சேவகனாய்...!
-வீ.சசி, காரைக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.