நாட்குறிப்பு
விதியின் கரங்களால்
கண்ணீர் மைகொண்டு
எம்சிரங்களில் அரங்கேறும்
வாழ்க்கை டையரி
கண்ணீர் இல்லாதபோது
தண்ணீரிலும் எழுதப்படும்
மறதி என்பது உறுதியானால்
இறுதியில் அமைதி!
உறுதியில் அமைதி!
டையறி இடறிட
அறுதியில் மனது(ல்) விழுவது உறுதி.
மறதிக்கு டையறி
மறவாதிருக்கவும் டையறி
நண்பனை சந்திக்க...நட்புக்கு
பிள்ளைகளுடன் பேச...பாசத்துக்கு
மனையாளை அணைக்க..காதலுக்கு
அம்மாவை அழைக்க....அன்புக்கு
எதிரிக்கு அடிக்க... வம்புக்கு
உணவு உண்ணக் கூட ...
டையறி... டையறி... டையறி
die அறி டையறி
நாளையைக் காட்டும் நாள்குறிப்பு- சில
இறந்தநாட்களில் ஏற்படுத்தும் வெறுப்பு
வெறுப்பு நிறப்பும் சிறப்பா டையறியா??
அடிக்கிறது பின்னால் புறம்போக்கு...!!!
வாழ்க்கையைத் திருப்பி வாசி
தீராத பிரச்சனைகளை திருப்பி யோசி
திருத்தி யோசி
வாழ்க்கை திருத்தி வாசிக்கப்படுகிறது
வாழ்க்கை
உங்கள் கரங்களால்
நாட்களில் மேலே
காலத்தின் கைகொண்டு
அனுபவ மையெடுத்து எழுதப்படுகிறது
நாட்குறிப்புக்களாக... டையறிகளாக!!!
-நோர்வே நக்கீரா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.