பார'தீ 'ஞாபகம்
அவன்
பிறந்தபோது தெரியாது
வளர்ந்த போதும் எதுவும் அறியாது
அறிவைத் தொட்டபோதுதான் புரிந்ததோ...!
இந்தத் தேசத்தில்
மனித சமூகம்
மாசுபட்டுக் கிடந்ததென்று...!
தன்னில்
வயது கடந்து போகச்
சிந்தையில் நெருப்பு கொண்டு எழுந்தான்...!
கல்வியின் கவனமெல்லாம்
அவனது
கற்பனையில் கனன்றன...!
அவனின் தலையில்
குடும்பி அகன்ற போது
முற்போக்கு முண்டாசு கம்பீரப்படுத்தின...!
ஒழுக்கமென்ற மூட ஒதுக்கங்களில்
அவனின்
மீசை முறுக்களில் ஆண்மை மிளிறின...!
தீண்டாமைச் சகதியை
உயர்ந்தோர் எண்ணங்களிலிருந்து
தள்ளிவிடும் அவனின் கருத்து தேய்ப்பிலே
நீயும் நானுமானவனென்ற
சந்தன வாசம் எங்கும் மணத்தன...!
புடவைக்குள் கமுக்கமென்று
கதவோரம் மறைந்த பெண்களை
தெருக்களில் இறங்கி நடக்கக் கூறிய அவனால்
பெண்மை கூட ஆளுமை செய்கின்றன...!
அன்னியரின் ஆதிக்கம் விரட்ட
கண்ணுறங்காக் கடமையில்
அவனுள் விடுதலை வேள்வி விழித்தன...!
தினம் அயராது அவன்
தீட்டிய கூரான கவிகளில்
சமூக அவலங்கள் வெந்து கருகின...!
சென்ற இடமெல்லாம் தொய்வின்றிப்
பேசி முழங்கிய வரிகளில்
இந்திய அமைப்பே வீருகொண்டன...!
அவனின் விழிப்புணர்வான
சாட்ச்டை சுழற்சியில்
குனிந்த அடிமைத்தனங்கள்
நிமிர்வோம் என்ற முணைப்புக்கு வந்தன...!
ஆச்சாரங்கள் ஒதுங்கிக்கொள்ள
அனைவரும் சமமென்ற
ஆணி வேர் ஆங்காங்கே பதியமிட்டன...!
சுதந்திரக் காற்று வீசினாலும்
இங்கே சொல்ல முடியாத புழுக்கங்கள்...!
'ம்...'
ஆனாலும்
இன்னும் எத்தனை காலங்கள் போயின்
கவிக்கனல் குறையாத
பார 'தீ ' ஞாபகம் மேவி நிற்கும்...!
- பாரதியான், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.