இந்தப் புத்தாண்டில்...!
காலம்
மற்றுமோர் புத்தாண்டை
புரட்டுகிறது...!
மனிதப் பிரபஞ்சம்
மகிழ்வு கொண்டு
விழித்திருந்து வரவேற்கிறது...!
தினம்
நாட்காட்டி கிழிபடும்போது
ஒவ்வொரு இதயத்திலும்
வாழ்வுரிமை நம்பிக்கை இணையட்டும்...!
விரோத குணங்களின் ஆனிவேர்
சகோதர மறுமலர்ச்சியில்
நிரந்தரமாய்
மரித்துப்போகட்டும்...!
தேசங்கள் தோறும்
பயங்கரவாத அமிலம்
ஒற்றுமை கரங்கொண்டு கடைய
அமைதி அமுதம் பொங்கட்டும்...!
ஏற்ற தாழ்வுகளற்ற
பொதுவுடமை
பொருளாதார வளர்சியில்
ஆயுதங்களின் பயன் குறையட்டும்...!
எல்லைக்கோடுகள்
இனி இல்லையென எங்கும்
நேசப்புன்னகை தவளட்டும்...!
- பாரதியான், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.