தைப்பிறப்பு இன்று!
தைப்பிறப்பு இன்று
தமிழர்களுக்கு நன்று...
அறுவடை தொடங்குவோம்
இல்லாமை அரக்கனை
இனி இங்கே இல்லாது
விடைபெறச் செய்வோம்...
ஏக்கங்கள் சுமந்த
பொழுதினை மறப்போம்
கொடைவிழா தங்கும் நாளென
மனமெங்கும் குதூகலம் அடைவோம்...
கடந்தகால வீட்டுக்குள்
கருமையாகக் கிடந்தோம்
கனிந்து வந்த காலமிதில்
கரும்பின் இனிப்பென களித்திருப்போம்...
எண்ணங்கள் கொண்ட
தீய வேற்றுமையிலே
வாசமற்று குமைந்தோம்
இன்று
வாசலில் தொங்கும்
மஞ்சள்க்கொத்து மணமாக
வசந்தம் பெற்று மகிழ்வோம்...
சாதி மதங்களை
பழமையென்று கொளுத்துவோம்
இங்கே
களம் வந்து குவியும்
உழைத்த பலனை எல்லோரும்
பகிர்ந்துகொண்டு வாழ்வோம்...
கசப்பான நிகழ்வுகளைக்
கடந்து போனதாக ஒதுக்குவோம்
மனித நேயம்
இன்னும் உள்ளதென
தேனோடு பாலாக - இங்கே
பொங்கும் பொங்கலாய்ச்
சுவைத்து மகிழ்ந்திருப்போம்...!
- பாரதியான், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.