எதிர்பார்ப்பு!
பழையன கழிதலும்
புதியன புகுதலுமாய்
புதிது புதியதாய்
எதிர்ப்பார்ப்புகளை
உருவாக்கி
சேமித்துக் கொள்கிறது
உள் மனக் கணினி.
எதிர்ப் பார்ப்புகள்
இல்லாதவர்கள் என்று
எவருமில்லை
இந்த அவனியில்,
யார் யாரோ
எப்பொழுதும் எதையோ
எதிர்பார்த்துக் காத்திருப்பர்
ஒவ்வொரு நொடிதோறும்,
எதிர்பார்ப்பது
எதிர்பாராமல்
நடந்து விடும் சற்று
கால தாமதமாக வேணும்,
எங்கும் எந்நேரத்திலும்
யாரேனும் ஒருவர்
எதை எதையோ எதிர்பார்த்து
ஏமாந்து விடுவதுண்டு.
எதிர்பார்த்தது
எதிர்பார்த்தபடி
நிகழ்ந்துவிடின்
எண்ணங்கள்
மனச்சிறகை விரித்துப்
பறக்கிறது வானில்,
எத்தனை எத்தனையோ
எதிர்பார்ப்புகளோடு
நகர்கிறது – இந்த
நித்திய வாழ்க்கை...!
- ந.க. துறைவன், வேலூர் – 632 009.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.