பாவங்களின் விடை?
உறவுகள் மனித வாழ்விலே
என்று மாற்றமடையா சுவடுகள்...
சுவடுகளை அழித்துவிட்டு சுகம்
காணும் புதுயுக மனிதர்கள்!
தோற்றத்தில் மாற்றம்- அதன்
பெயர் வைத்தான் நவீனமென...
மாறிய புதுயுகம் மரணம்வரை
கொண்டு செல்லுமென மறந்தவனாய்!
மனிதத்தினுள் மிருகம் குடிகொள்ள
அறிவின் கண் ஒளியிழக்க,
தேடியலைந்தான் அற்ப சுகங்களை
ஆட்டம் கண்டான் ஆன்மீகத்தில்!
ஒருத்தனுக்கு- ஒருத்தியென்ற சமூகத்
தத்துவத்தை உடைத்தெறிந்தான்
களங்கத்தை கண்ணில் வைத்து மோக
வெறியுடன் ஒன்றுக்கு மேல்
உறவுகொண்டான்!
ஒழுக்கம் இன்று ஒழிந்து கொண்டது
இறக்கம் காட்ட மறுத்து நின்றது...
தாங்கொணாத் துயரினால் ஓலமிட்டு
மனிதனைத் தூக்கிலிட முடிவு செய்தது!
இதயமற்ற மனிதனே திருந்திடு- என
இரத்த நோயாய் "எயிட்" சை
மனிதனுக்குள் ஏவிவிட்டது...
உடல் எதிர்ப்பின்றி ஊசலாட
இறந்துமடி என சாபமிட்டது!
சாபத்தைத் தொடர்ந்தன சந்ததி
சமுதாயத்திலும் ஒதுக்கப்பட்டனர்...
ஒவ்வொரு தாக்கத்துக்கும் மறு
தாக்கம் உண்டென்றான் நியூட்டன்...
விதை விதைத்த மனிதன் இன்று
அதை அறுவடை செய்கின்றான்!
- துஷ்யந்தி, வத்தளை, இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.