காதல் விளைவு
நொடியை விட
வேகமாய்
நீ பார்க்கும்
அசாத்திய
பார்வையில் தெரியுதடி
என் மீதான காதலும்
உன் மீதான பயமும்...
உன் பிரிவு எனக்கு வலியேதுமில்லை
இருந்தாலும்
நீ காட்டிய அன்புதான்
வலியை
இன்னும் அதிகமாக்கிக் கொண்டே போகிறது
கனவில் கூட
இரவையும் பகலாய் மாற்றி
உன்னுடனே
பயணிக்கிறேன்
யாருமில்லாத
நமக்கான உலகத்தில்...
குயவனாய்
வனைய முயல்கிறேன்
வார்த்தைகளால்...
இருந்தும்
எழுத்துக்களெல்லாம்
குழைய ஆரம்பிக்கின்றது
உன்னைப் போலவே...
பேருந்துப் பயணத்தின் போது
பல பாடல்களின் நடுவே
மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது...
நீ சிரிக்கும் சத்தம் மட்டும்...
- கவிஞர் மு. முத்துமாறன், வெங்கலம். பெரம்பலூர் மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.