அழியாத நினைவு...!
ஓ மரணமே!
உனக்கென்ன அவசரம்
தனக்கொன்றுமில்லை - தேசமே
எனதென கருத்தாய் சிரித்த
ஒப்பற்ற மாமனிதரை
சற்றுக்குள் எடுத்துக்கொண்டாய்...
பிறந்த தன் தாய்த் திருநாட்டை
உலகமே திரும்பிப் பார்க்க
ஓயாது ஆராச்சி செய்து
அக்னி, பொக்ரான் சாதித்தவர்...
இந்தியப் பக்கங்களிலே
வாழ்வியல் தத்துவங்களைப் பதித்து
சுயமற்ற தனது நிலையில்
பொதுநலத்துடன் வாழ்ந்தவர்...
‘கனவு கானுங்கள்'
சொல்லி ஒவ்வொருவரையும்
அவரவர் லட்சியங்களில்
விழிப்போடிருக்க கூறியவர்...
இளைஞர்களின் எண்ணங்களிலே
அக்னி சிறகுகளால் பறந்து
திசைமாறாது அவர்களிருக்க
தன்னையே அடையாளமாக்கியவர்...
வல்லரசின் நிமித்தலுக்காக
வளரும் தலைமுறையினருக்கு
நம்பிக்கை உறுதியூட்டி
எப்போதும் நெம்பிக்கொண்டிருந்தவர்...
புண்ணிய பூமியில் பிறந்து
இந்திய தேச அரங்கில் உயர்ந்து
காலம் போதுமென்றதோ அதே
புண்ணிய மண்ணில் அடங்கும்
எங்கள் கலாம்
என்றும் அழியாத நினைவு!
- பாரதியான், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.