எல்லாம் பழகிப்போச்சு...!
இப்போதெல்லாம் நான்
அதிகமாக
முகநூல் பக்கம் வருவதில்லை...
பார்த்த முகத்தையே
எத்தனை நாள் பார்ப்பது?
இப்போதெல்லாம் நான்
அதிகமாக
நடைபயிற்சி செய்வதில்லை...
பார்த்த ரோட்டையே
எத்தனை நாள் பார்ப்பது?
இப்போதெல்லாம் நான்
அதிகமாக
தோட்டத்துப் பக்கம் நகர்வதில்லை...
முகர்ந்த பூக்களையே
எத்தனை நாள் முகர்வது?
- ஆனாலும்
இப்போதும் நான்
வாக்குச் சாவடிக்குப் போகிறேன்
வேட்பாளர்கள் சரியில்லை என்று தெரிந்தும்
மீண்டும் ஓட்டுப் போட...
என்ன செய்வது...?
- சுசீந்திரன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.