தகுதி உள்ளவை பிழைக்கும்!
வாழ்க்கைக் காட்டில்
கொன்று வாழும்
சிறுத்தையும் உண்டு
நின்று வாழும்
மானும் உண்டு
கொல்வதால் நின்று
வீழ்வது முழுதும்
வீழ்வதும் இல்லை
வீழ்வதால் கொன்று
வாழ்வது சலிப்படைவதுமில்லை
ஆதவன்கரம் உயர்ந்ததால்
தண்ணீர்ஈரம் குறையலாம்
ஆனால் மறைவதில்லை
ஆதவக்கரம் படாத
இடத்தில் தண்ணீர்ஈரம்
இருக்கத்தான் செய்கிறது
வாழ்க்கைக்காட்டில் தகுதியானதே
பிழைக்கும் என்ற நீதி
இழைப்பது கொலையல்ல
வாழும் கலை
இந்தக்கலை அறிந்தவன்
பிழைக்கிறான் அறைகுறையாக
அறிந்தவன் நிலைக்கிறான்
தெரியாதவன் தொலைகிறான்
தொலைகிறவன் கதையாகிறான்
நிலைக்கிறவன் கவிதையாகிறான்
பிழைக்கிறவன் கட்டுரையாகிறான்
வாழ்க்கை இலக்கியத்தில்
இலக்கண பிழையில்லாமல்...
- நேதாஜிதாசன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.