இதயமையில் இதயத்திற்கு கடிதம்
வெள்ளை காகிதம்
மரங்களின் ரத்தம் அவை,
வெறுமையை வெண்மையாக
தாங்கி தூங்கிக் கொண்டிருந்தது.
அவன் காதல்வயப்பட்டவன்
பேனாக்களில் அவள் நினைவும்
மையாக அவன் இதயமும்
நிரப்பி வைத்திருந்தான்
தாய்மொழியைத் தவிர
அவனுக்கு காதல்மொழி
புலமை அதிகம்
என்பதால் எழுதத்தொடங்கினான்
கும்பகர்ண தூக்கத்தில்
இருந்து வெள்ளைநிறத்தான்
அவன் இதயமை
பட்டதும் கண்விழித்தான்
இதயமை பட்ட இடமெல்லாம்
காதல் கண்ணீர் உணர்வு
காகிதம் கண்ணீர் விட்டது
நான் அவளாக இல்லையென
ஆறுதலாகக் காகிதத்துக்கு
முத்தமிட்டு முத்திரையாக்கினான்
காதல் சிந்தக்கூடும் என
ஒரு உறையில் இட்டான்
உள்ளே உள்ள எழுத்துகள்
எல்லாம் அவன் முட்டாள்தனத்தின்
வரலாற்று சம்பவங்கள்
எங்கும் அவள் பார்வை வினைகள்
காதலுக்கு அடையாளமாக
அந்தக் காகிதத்தை மறுவிசாரணை,
கண்ணீர் தண்டனைகள்
கனவில் அவளோடு முதுமை எய்திய அனுபவம்
முத்தக்கொசுகள் கடிக்காதா என
கண்ணீர் ரத்தம் காட்டிய நினைவுகள்
மொழிபிழையில்லாமல் தாங்கிக்கொண்டான்
அந்த வெள்ளைநிறத்தான்
கடிதம் என பெயரிட்டான்
காதலே கொண்டுசேர் என தூதுவிட்டான்
அவள் பார்வையோடு புணரட்டும்
என் இதயமை என கனவாடினான்
- நேதாஜிதாசன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.