பிறப்பு
கருப்பையின்
கதிரியக்க
வெப்பத்தில்
தரித்த ஜனனம்
ஆன்மாவின்
மறு ஜென்மம்
ஒரு புள்ளியோடு
துவங்கியது
பலத்துகள்கள்
ஒட்டிக் கொண்டு
உருவம்
கொடுத்தது
உணர்வுகள்
உயிரிலிருந்து
பிரசவித்தது
எனக்கென்று
தனி உலகமா?
விசித்திரமான
வியப்பு
பாட்டு என்ற
ஒன்றால் என்னைத்
தாலாட்டுபவள்
பெண் என்பவளாம்
பெண்ணாய்ப்
பிறந்தாச்சே
என்ற சப்தமே
நானிருக்கும்
அறையில்
எதிரொலிக்கும்
சங்கீதம்
ஆணா? பெண்ணா?
வாக்குவாதத்தில்
பனிக்குடத்தில் பறக்கும்
பட்டாம்பூச்சியாய் நான்
அடிக்கடி
நிலநடுக்கமாய்க்
குலுங்கும்
எனதறையில்
அழுகுரலின்
அதிர்வு
மருந்துகளிடம்
மயங்கி
கருப்பையின்
வாசலில்
திறப்பு விழா
முரட்டுப் பிடியில்
ஒட்டிக் கொண்ட
உறுப்புகளின்
உறவுகள் துண்டிப்பு
இருண்ட
வெள்ளமாளிகையில்
இருந்து மீண்டும்
வெள்ளி உலகுக்கு
மறு பிரவேசம்
இறைவா,
பாவம் என்ன
செய்தேன்?
நீ தெய்வகுழந்தை
- சிவமணி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.