சின்னச் சின்னக் கவிதைகள்
வீட்டில்
அரிசி காலி.
கழுத்தில்
கோதுமை செயின் காலி.
இப்போது
நிறைந்திருக்கிறது வயிறு.
*****
நீர் வற்றிய பின்
கிணற்றை
எட்டிக்கூடப் பார்ப்பதில்லை
நிலா
*****
மூச்சுமுட்டி வெடித்தது
பலூனும்
சில வண்ண நிலாக்களும்
*****
காளான் நிழலில்
இளைப்பாறுகிறது
எறும்பு
*****
பூமி சுற்றுவதை
துல்லியமாக அறிகிறான்
"குடிமகன்"
*****
தலை நிமிர்ந்து
எனை நோக்கு
தொலையத் தயாராகிவிட்டேன்
உன் கருவிழிகளின்
காரிருளில்.
*****
துளியும் மீதமின்றி
என்னை
வியாபித்த நீயே
எங்கே நான்.
-நெகிழன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.