ஆசான்
சிகரம் தொட
அகரம் கற்றுத் தந்த ஆசானே!
உந்தன் ஸ்வரங்களைப் பாடிட
எந்தன் விரல்கள் செய்த
தவம் இது...
குறும்புகள் பல செய்யும்
அரும்புகள் நாங்கள்...
எம்மை உம் அன்பு மழையில் நனைத்து
எம் பண்பைப் பண்படுத்திய தந்தையோ?
துயரத்தில் உதவிடும் தோழிகளோ?
எம்மை ஈன்றெடுக்காத
இரண்டாம் அன்னையரோ?
புரியாத புதிர் தான்...
ஆனால்,
பிரியாத உறவு தான்!
வாழையடி வாழையாக
உம் கருவறையில் பிறந்திடும்
வரம் கிடைக்காவிட்டாலும் சரி...
உம் வகுப்பறையில்
மாணவிகளாக வாழ்ந்திடும்
வரமாவது கிட்டட்டும்...!
- போ. சங்கரீஷ்வரி, சிவகாசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.