தமிழா...! தமிழா...!!
தமிழா...! தமிழா...!!
ஒளிந்து விளையாடிய சூரியனில்
ஓட்டை விழுந்துவிட்டது.
ஓடிய ஆடிய நீர்நிலைகள்
உறைந்து போய் விட்டது...!
விளைந்த வளங்கள்
வெட்டவெளியாகிப் போய் விட்டது!
செழித்த நம் நாடு
சீரழிந்து போய் விட்டது!
போதாதென்று...
விதைப்பவன் வெறுக்கின்றான்
விற்பவன் சலிக்கின்றான்...!
வளங்கள் கண்ணீர் வடிக்கிறது...!
வரி விதிப்போன் இசை பாடுகிறான்...!
வாணிபம் வசை பாடுகிறது...!
இன்று...
கனிந்த காலங்கள்
காற்றில் மறைந்துவிட்டன...!
பணிந்த மனிதர்கள்
பாராங்கற்கள் ஆகிவிட்டனர்...!
செரிந்த மனிதர்கள் செரிவற்றவர்களாய்...!
சொந்தங்கள் சொற்பமாய்...!
சுற்றங்கள் சுயநலமாய்...!
நட்புகள் நாசூக்காய்...!
நாட்டில் நடமாடுகின்றனர்...!
தமிழனின்... தரம்...!
தண்ணீரில் கரையும் கரைசலாகிவிட்டது...!
தமிழா...! நீ எழு... எரிமலையாய்...!
அன்று...
விளங்கும் இந்த தேசம்...
மீண்டும் நம் நேச தேசமாய்...!
- இளவரசி முருகவேல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.