கரி நாக்கு
சோத்துக்கே வழியில்ல
சோத்தோட எலும்பெல்லாம்
போட்டு வளர்க்க வேண்டியிருக்கு
நாய்களுக்கு...
அதுவும்
ஒண்ணில்ல இரண்டு...
ஆளளவு உசரத்துல ஒண்ணு கிடக்கு...
அதுவே இரண்டு பேர் சாப்பாட
ஒரேயடியா அமுக்கும்...
ஒரு நாய் போதாதா
எதுக்கு ரெண்டு ஆ...
இம்புட்டுத்தான் அவ கேட்டது
அதுவும் இல்லாதவனுக்கு
எதுக்கு இந்த சீரழிவுன்னு
நெனச்சுக் கேட்டது...
அடுத்தநாளு காலையில
ஒரு நாய் செத்துக் கிடக்கு...
பாம்பு கொத்தின அடையாளம்
கெடந்திருக்கு...
சுற்றிலும் அந்தக் கருவேல முள்ளுப் பத்தைதான் கெடக்கே...
ஆனாலும் குத்தம் அவ மேலதான்
விழுந்துச்சு...
அவ நாக்கு கரிநாக்காம்...
அதானாம் நாய் செத்துப் போச்சாம்...
கண்ணாடில போய்ப் பார்க்கிறா...
கரி அவங்க மனசிலதான்
கெடக்குதுன்னு அது சொல்லிச்சு...!
-மகிழினி காந்தன்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.