அமைதியைக் காண...!
மலையிலிருந்து விழுகும்
அருவியில்
பேரிரைச்சல் ஓசை
மரத்திலிருக்கும்
குருவியில்
கியா கியா ஓசை
கடலில் வரும்
அலையில்
சல சல ஓசை
காற்றில் ஆடும்
இலையில்
சட சட ஓசை
மேடு பள்ளம் ஓடும்
ஆறுகளில்
கல கல ஓசை
மேல் வானத்து
இடி மின்னலில்
சட சட ஓசை
அடுப்பிலெறியும்
தீயில்
மட மட ஓசை
செடியில் பறக்கும்
சில்வண்டுகளில்
கொய் எனும் ஓசை
வீட்டிலே கூவும்
சேவலில்
கொக்கரக்கோ ஓசை
காட்டிலே வாழும்
விலங்குகளில்
கரடு முரடு ஓசை
படைக்கப்பட்டவை
ஒவ்வொன்றிடமும்
ஒரு ஓசை
இயற்கை தரும் ஓசைகளில்
எத்தனையோ
இனிமை
இனிமையை விடப்
பெருமையான அமைதியை
இறைவனிடம் மட்டுமே
காண முடியும்...!
- முத்தமிழருவி மாரிமுத்து.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.