‘மேல்' மக்கள்
எல்லா வழிகளிலும்
மேலே வசிக்கிறவனுக்கே
வாய்ப்புகள் அதிகம்...
குப்பையை மேலிருந்து
கீழேக் கொட்டலாம்.
வீடு கழுவிய
அழுக்குத் தண்ணீரை
முன் வாசலில்
விழ வைக்கலாம்.
நாட்காட்டி மாட்ட
ஆணி அறைந்தோ,
கதவினை அறைந்து சாத்தியோ,
வீடு மெழுகும் சாக்கில்
மேஜை நாற்காலிகளை
அங்கும் இங்கும்
'கர் புர்' என்று நகர்த்தியோ
எப்படி வேண்டுமாயினும்
நினைத்த மாத்திரத்தில்
எரிச்சலூட்ட முடிகிறது...
ஆனாலும் மேலே போகாமலே
எத்தனை நாட்களுக்கும்
என்னால் வாழ்ந்து விட முடியும்...
கீழே இறங்கி வராமல்
இருந்து விட முடியுமா
ஒரே ஒரு நாளாவது அவனால்...?
- ஆதியோகி, திருச்சி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.