முதல் காதல்
பாலை நிலத்தில்
எதுவும் விளையாது என்பதை அறிந்தும்
பைத்தியக்காரனாய்
பயிரிட்டு தோற்ற
அன்பின் தீவிரவாதி நான்
பிறர் சிரித்திருக்க வேண்டும் என்று எண்ணுபவனின்
வாழ்க்கையில் கண்ணீர் மட்டுமே சொந்தம்?
எது நானாக நீ நினைத்தாயோ
அது முற்றிலும் நானில்லை
சுயம்புவாய் முளைக்கும் விருட்சம் தான் -ஆனால்
சுயம் தொலைத்த கதைகள் சொல்லி
என் கண்ணீருக்கு
உங்களை விலை சொல்ல வைக்கும்
ஈவு இரக்கமற்றவன் நானில்லை
பாரி வள்ளலாய் கருணையற்று
கஷ்டங்களைக் கொட்டிக்கொட்டிக் கொடுக்கும்
கடவுளிடம்
கடைசி வரை புன்னகை ஒன்றையே உதிர்க்கிறேன்
எப்ப பார்த்தாலும்
காதலை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாயே
உனக்கு வேலை இல்லையா-என்று சொல்லும்
நட்புகளுக்கு எப்படிச் சொல்வேன்?
என் உயிர் தான் காதலென்று !!
தொலைந்து போனவனின்
காதல் டைரியில்
தொலையாமல் பொக்கிஷமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறது
செல்லரித்து போகாத முதல் காதல் !!
- இரட்சகன், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.