இந்த நூற்றாண்டு
காலச்சக்கரத்தின்
மாயச்சூழலில்
பொக்கரான் துகள்கள்
பூமியில்…
தலைக்கு மேலே
பறக்கும் விமானங்களின்
இரைச்சல்
அணுத்துகள்கள்
தெருப்புழுதியாய்
இயந்திரக் கழிவுகள்
குப்பைமேடுகளாய்
ஒரு புண்ணிய பிரதேசம்...
நிமிர்ந்த நடையும்
நேர்கொண்ட பார்வையாய்
இயந்திர ரோபோக்கள்
மனிதன் அவனுக்குச் சேவகனாய்
கால்சட்டை கழற்றுவதிலிருந்து
கணினி திருத்துவது வரை எல்லாமே
அவர்கள்தான்…
மனிதன்
மனிதனுக்கு அடிமையாய்
மனிதன் இயந்திரத்திற்கு
அடிமை...
இயந்திரம் மனிதனை
இயக்குகின்றன…
அதிவேகத் தொடர்வண்டி
வானூர்தி
விமானங்கள்
எல்லாமே சாத்தியமாயிற்று
ஆனால்
மனிதக் கழிவை மட்டும்
மனிதனே அள்ளும் நிலை
மாறவில்லை...
இந்த நூற்றாண்டு இன்னும்
தொழில்நுட்ப வளர்ச்சியில்…
- புலவர் இரா. முரளி கிருட்டினன், திருச்சிராப்பள்ளி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.