தரிசனம்
நானந்த பேருந்து
நிறுத்தத்தில்
காத்திருந்த போது தான்
அவளங்கு வந்தாள்.
அவளென்னைப் பார்க்கவில்லை
என்பதேயுண்மை
அது பெரிதல்லவெனக்கு.
நொடிக்கொரு தரமென
பேருந்து வரும் திக்கினைப்
பார்த்தவாறிருக்கிறாள்.
என்னவசரத்தையும்
மறந்து நானவளையே
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
கடவுளின் செவியினைத்
தைத்திருக்கும் போல...
என் வேண்டுதல்.
வரவில்லை பேருந்து.
இந்தக் கவிதையை
நீங்கள் படித்து முடித்திருந்த
சமயத்திலும் கூட
வந்திருக்காது பேருந்து.
அவள் பேரழகியல்ல...
எனினும்
உங்களைப் போலவே
வைத்த விழியெடுக்காமல்
நானின்னமும்
தரிசித்துக் கொண்டுதானிருக்கிறேன்
அவளை...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.