இப்போதெல்லாம்...!
நானாக விழுந்ததில்லை
என்னைத் தடுக்கி விட்டவர்கள்
தூக்கி விடுவதுமில்லை.
என் உப்பைத் தின்றவர்களே
கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.
நானே கவனித்து
மெதுவாய் எழுகிறேன்.
எழுந்தபின்
சுற்றும் முற்றும் தேடுகிறார்கள்.
கிடைத்ததை வாரிச்
சுருட்டிக்கொண்டு ஓடுவதற்கு.
நான் ஏமாளியாய்
இருந்தவரை கொழுத்த லாபம்
பார்த்தவர்கள் அவர்கள்.
தெளிந்து விட்டேன்
காலத்தின் கட்டாயம் கருதி.
இப்போதெல்லாம்
நான் விழுவதுமில்லை
கைகொட்டி
யாரும் சிரிப்பதுமில்லை.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.