காற்றின் தழுவல்
நானே வந்துவிடுகிறேன் என
ஒவ்வொரு முறையும்
காற்று
வந்த வண்ணமிருக்கிறது
நான் மறந்து விட்ட பொழுதும்.
என் மேல் அதற்கு
ஆயிரமாயிரம்
பிணக்குகள் இருக்கலாம்
அற நெறிப் பிறழ்வால்.
விடும் மூச்சு
அதன்
மேனியை வருத்தி
வேதனை கூட்டி இருக்கலாம்
விருப்பங்கள்
யாவும்
சுயாதீனமானதால்.
அனுசரணையாக
அது ஓடிவந்து
அணைக்கும்
தழுவலில்தான்
நான்
உயிர்த்துக் கிடக்கிறேன்
எனும் போது
நான்
உன்னை நோக்கி
ஓடி வருவதில்
ஒரு பாதகமும் இல்லை
நீ
என்னை நினைக்காத பொழுதும்.
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.