வரலாற்றை மறக்காதீர்...!
வரலாறு
மனித இனத்தினுடைய
அடையாளம் அன்று
ஊணை இழந்து
உரிமை இழந்து
உறவை இழந்து
ஏன்...
உடைமையும் இழந்து
வரலாற்றை மறந்து
நின்றோம்
இன்று
என் மொழி அழிந்து
என் இனம் அழிந்து
என் வரலாறும் அழிந்து
கட்டிக்காக்க யாரும்
இல்லை என்று
கலங்கி நிற்கின்றதையா
என் இதயம்
இறந்த காலம் விட்டுச் சென்ற
சுவடுகளை
மறக்குமா நெஞ்சம்
காலங்கள் ஓடி மறைத்தாலும்
காயப்பட்ட மனம்
அதை மறுக்குமா?
ஒளியால் சுடர்விடும்
நம் வரலாற்றை
நெஞ்சில் சுமந்து சொல்லுங்கள்
காலம் கடந்து நிற்கும்
சான்றுகள் அவை
வருங்காலத் தலைமுறைக்கு
எடுத்துச் சொல்லுங்கள்
புதிய தேசம் கட்ட
பழைய நம்பிக்கையை
அழிக்காதீர்
பிழைத்தும் போராடிய
வரலாற்றை மறக்காதீர்...!
அதுதான் நமது பாதை..!
- குமாரசூரியர். யர்சினி, மாவடிச்சேனை வெருகல், திருகோணமலை, இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.