பிறந்த இடத்துச் சுகம்
ஒற்றைச் சொல் பிடித்து
ஓடி வந்தமர்ந்து
வாசம் பிடித்தது.
சொற்களைப் பாவி
அதைச் சொன்னபொழுதெல்லாம்
சூழ் கொண்டதற்காக
மகிழ்ந்த இடம்.
அந்நியமாகத் தெரிந்த
அத்தனை முகத்திலும்
பொத்திப் பாதுகாத்த
வாஞ்சைகள்
இல்லை
வெக்கை அனல்
வீசியதைத் தவிர.
உணவெடுத்து
உண்டு மகிழ
ஒவ்வாத மனம்
ஒரு குவளை
தேநீர் பருகலோடு
பட்டுத் திரும்பும்
பந்தாக
பாரியப் புரிதலில்
வந்த பிறகு தான்
ஏற்றது மனம்
என் வீடு
என் குடும்பம்
என் உறவுகளென
விட்டுக்கொடுத்து
கட்டுப்படும்
வினோதக் கலைப் பயின்று.
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.