ஆரூர் தந்த அருந்தமிழே..!
ஆரூர் தந்த அருந்தமிழே
அண்ணா போற்றிய தம்பியே
பெரியாரின் பகுத்தறிவு பாசறையில்
பக்குவமாய் புடமிடப்பட்ட கலைஞரே
தமிழ்த்தாயின் புதல்வரே நிவிர் வாழி.
அண்ணா பெயரிட்டார் தமிழ்நாடென்று
அதற்காய் உழைத்த முத்தமிழே
தமிழுக்கு இடையூறு வந்தபோதெல்லாம்
தமிழ் உணர்வூட்டிய உத்தமரே
செழுமையாய் தீட்டினாய் திட்டம்பல.
அகிலம் போற்றிடவே செம்மொழி
மாநாட்டை மாண்புற நடத்தியதால்
உலகத் தமிழர் உள்ளத்திலே
நீங்கா இடம்பிடித்த கலைஞரே
உன் புகழ் நிலைக்கும் பலநூறு ஆண்டு.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்
ஏழையையே இறைவனாய் கண்டார் அண்ணா
அண்ணாவின் எண்ணம் நிறைவேற
எண்ணற்ற திட்டம் ஏழைக்காய் தீட்டினாய்
எம்மனதில் என்றும் கோபுரமாய் நிலைத்தாய்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.