வீழ்வதில்லை இமயம்..!
வீழ்வதில்லை இமயம்
காலம் அந்த
கலையெதார்தக்காரனை
கை நழுவவிடுவதில்லை...
‘என் இனிய..’ குரலும்
புன்னகை பூத்திருக்கும் முகமும்
சினிமாவில் பயணிப்போருக்கு
பரிச்சயமான படிமமாகும்...
செட்டிலேயே பிரவேசித்திருந்த
கேமராக் கண்களை
கிராமத்தை நோக்கித் திருப்பி
பலரது கனவுகளுக்கு
நிஜம் கொடுத்த ஆசான்...
இவரின் பாதையில் இருந்தே
ஏக படைப்பாளிகன் பயணம்
இவரின் ஒரு கை கொண்டு
விலக்கிய பார்த்தலில்தான்
‘நாயகி’ என்ற பலரது பரிமானம்...
முட்டத்துக் கடற்கரையோரம்
கவிதைப்பூக்கள் அலையது
கண்ணீர் வடித்து வடித்து
தனது ஆத்மார்த்த ரசிகனை
பாறைக்குன்றின் மீதும்
கல் மணல் இடுக்குகளிலும்
தேடியே செல்லுமே...
இளம் இதயங்களின்
இதமான உணர்வுகளை
திரையோவியத்தில்
இவர் வரைந்த பிறகே
காதலின் மேடையில்
முதல் மரியாதை...
வேதத்தின் மீது
பகுத்தறிவைப் போர்த்தியும்
பெண்சிசு கள்ளிப்பாலில்
அரசுத்தொட்டில் ஆடியதும்
புதுமைப்பெண்களை
புயலாக மாறியதும்
மண்வாசனைப் படைபாளியே...
அதோ பண்ணையில்
கிராமத்து சினிமாவுக்கு
உயிர் கொடுத்து வளர்த்த
பாரதிராஜா என்ற உயிர்ப்பு...
திரைத்துறை இருக்கும் வரை
வீழ்வதில்லை இமயம்!
- காயத்ரி மாணிக்கம், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.