ஜீவியத்தின் மகிமை
பரிவின் பெலன்களைச் சுவைக்காத
அறியாமைக் கைகள்
சிலுவையில் அறைந்தது
நித்திய ஜீவனடையாமல்
தேவ குமாரனை
வெறுத்து.
உயிர்த்தலில்
மனம் திரும்பாத
மன்றாட்டங்கள்
விசுவாசத்தை
விட்டு
ஆராதனைகளில்
மகிழ்கிறது
மகிமை பெற்றுவிடலாமென.
வருத்தப்பட்டுப்
பாரம் சுமக்கிறவர்கள்.
மரணம்
பாவத்தின் சம்பளமென
இளைப்பாருகிறார்கள்.
ஹிருதயத்தை
சுத்திக்கரிக்காமல்.
பரலோகக் கனவுகளை
பற்றிய
ஆத்துமாக்கள்
தேவ சகாயத்தில்
இருதயம்
களி கூறுவதை
மறந்து போனது
தேவகுமாரனைப் பிடித்து
கர்த்தருக்குள்
ஜீவிக்காமல் போனதால்.
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.