தெளிவதன் புலம்பல்
பழகிய வார்த்தைகளுக்குச் சலிக்காதக்
கைகள் அனிச்சைமாக வானம்
பார்த்தது.
பிறருக்காவும் உயர்த்தப் பழக்கிய
மனம் அப்படியொன்றும் பெரிதாகப்
பிறர் நலம் பேணுவதில்லை.
தோல்கள் கடுக்கும் அநேக
இறைஞ்சலில் தனக்கு இணையான
பிறவைகளும் இருப்பதறிந்தால்
இளிச்சவாயனென அறிவில் ஆகக்
குறைவானரும் எளிதில்
சொல்லிவிடலாம்.
காரணங்களில் சிக்கிய வாழ்க்கையில்
பின்னலெடுத்து லகு வாக்க எப்பிரயத்
தனமும் உதவாத பொழுது கைகள்
தானாக மேலெழுந்து விடுகிறது.
கண் மூடி கண்ணீரை அடக்கி எனக்காக
எவராவது கைகள் ஏந்துவார்களா என்று
கவலைகள் சூழும் பொழுது
உதவியதை உள்ளத்தில் அண்டாது
துடைத்தவனுக்கு எப் பெயரும் எதுவும்
நினைவுக்கே எட்டாமல் கைகள்
மட்டும் அனிச்சையாக உயருவதில்
யாதொரு வியப்புமில்லைதான்.
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.