கடவுள் சிலையானார்
பக்தர்கள் காணிக்கையில்
பங்கு பெற்ற கடவுள்
அலங்காரமும் ஆபரணமாய் ஜொலிக்க
வேண்டுதல் நிறைவேறா மனங்களின்
வேண்டுதலில் கடன்காரனாகிறார்.
காசும் பணமுமாய்
கண்குளிரக் காட்சி தந்த
கடவுளுக்கு
வரம் தந்த வாக்குகளை
எண்ணிட இயலாமல்
பிசகிப் போகிறது
பீடத்தின் இருப்பு.
சுவர்களுக்குள் சுழன்றபடியே
எதிரொலிக்கிறது
தவங்களின் கூக்குரல்.
வெளியேற்றவியலா ஏக்கத்துடன்
விடைபெறும் கடவுள்
சிலையாகிப் போகிறார்
கருவறைக்குள்...!
- இளையவன் சிவா, நரசிங்காபுரம், திருப்பூர் மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.