என்னைத் தவிர்த்து...!
வானில் எழுதும்
வண்ணத்துப்பூச்சி
இழந்தது
எதுவாக இருக்கும்
இச்சோகப் பிதற்றலுக்கு.
நடையில்
வெறுப்புகள்
கொண்ட
முதியவருக்கு
அரவணைக்காத
பிள்ளை
எவராக இருக்கும்
ஆற்றாமை மேலிடுவதற்கு.
அசைந்தாடும்
செம்பருத்தி
இழந்த ஒற்றை
பூவிற்காய்
இத்தனை சோகம் கொள்வதற்கு.
பூத்திருக்கும்
தேக்கு மரம்
வானம் தொடாத
வருத்தத்தில்
அழைக்கின்றது
அழுவதற்கு.
கூடு திரும்பும்
பறவைகள்
கீசுவது
ஓலமென
வலிக்கிறது
மனமெங்கும்
புரியாத மொழிகள்
நினைத்து.
மறைகிறது
சூரியன்
கவலையாக
கதிரொளி தணித்து
அந்தியிருள்
சூழ.
யாவுமிருக்கிறது
தனித்து
சிறந்து
தூங்கித்
தொலைத்து
துயரமாக்கிய
அந்தியில்
என்னைத் தவிர்த்து...!
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.