வாசிப்பின் வசியம்
மழைத்துளி மணலிடம்
சொன்னதை
நண்டுகள்
நகலெடுக்க ஓடியது
சொல்லிய வரிகளைக் கலைத்து.
ஒதுங்கியக் கழிவுகளில்
பொறுப்பின்மை
நிறைந்து கிடந்தது
பொதுவுடைமைகளற்று.
காற்றுப் பொருளெடுத்து
தூசுகளில்
தூக்கிச் சென்றது
அறியாதவர்களின்
கரங்களில்
அகப்படாதெனத் தெரிந்தும்.
அழிக்கப் பழகிய
கால் தடங்கள்
வரி வரியானவைகளை
சிதைப்படி
காதலோட்டத்தில்
திளைத்தது
கிரக்கச் சுகத்தில்.
அலைகள் மட்டும்
எழுதியதைத் தொட்டு
எழுந்த
வண்ணமிருந்தது
புரிந்தவைகள்
ஒதுங்கி
நடுக்கடலான
மௌனத்தில்.
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.