எனக்குள்ளே வருவாயா…?
ஒரு நாள் சிரித்தேன்
ஒரு நாள் அழுதேன்
உன்னை எண்ணித் தவித்தேன்
எனக்குள்ளே மரித்தேன்
மீண்டும்
உனக்குள்ளே தரித்தேன்
என்னைத் தாங்கிடுவாயா..?
ஒரு நாள் சிறையில்…
ஒருநாள் சிறகில்…
என் மனம் உனக்குள்...
உனக்குள் வாழ்வேன்
அனுமதிப்பாயா..?
சில வெறுத்தேன்
பல நாள் வருந்தினேன்
உன்னைக் காண நினைத்தேன்
எனக்குள்ளே தேடினேன்
எதிரில் வருவாயா….?
சில நாள் தூங்கினேன்
பல நாள் விழித்தேன்
எம் பயணத்தை நினைத்தேன்
பாதியில் அழுதேன்
கண்ணீர் துடைப்பாயா..?
சில நாள் கதைத்தேன்
பல நாள் பகைத்தேன்
என் இதயத்தில் உன்னை வைத்தேன்
எனக்குள் உன்னை அழைத்தேன்
விடையளிப்பாயா..?
ஒரு நாள் உயிர்த்தேன்
மறு நாள் மரித்தேன்
உன் சுவாசத்தில் வாழ்ந்தேன்
உன் பார்வையில் கரைந்தேன்
இதயத்துள் நீ இருப்பாயா..?
சில நாள் சிலிர்த்தேன்
சில நாள் சினந்தேன்
உன்னை விட்டு பரிதவித்தேன்
எனக்குள்ளே அவதரிப்பாயா..?
- சம்பூர் சனா, புத்தளம், இலங்கை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.