அவதாரம்
அவதாரங்கள்
பல கொண்டேன்
அவள் என்னை காதலித்தாள் !
நான்
கவிஞனாக - உன்
விழிகளிரண்டும் எனது
பார்வையோடு இதமாய்
நிலைகுத்தும்போதெல்லாம் !
நான்
ரசிகனாக - நீ
ஏகமாய் அழகோடு வந்து
எதிப்படும்போதெல்லாம் !
நான்
ஓவியனாக - உன்
நினைவு எனது உணர்வுக்குள்
வண்ணக்கலவையாகி ஞாபக
தூரிகையாகும்போதெல்லாம் !
நான்
இலக்கிய வாதியாக -நீ
அடிக்கடி என்னிடம்
அம்பிகாவதி அமராவதி
காதலை குறிப்பிடும்போதெலாம் !
நான்
பேச்சாளனாக - நீ
என்னுடன் பழகிவிட்ட
பக்குவத்தில் நண்பர்களுடன்
உரையாடும்போதெல்லாம் !
நான்
அதிர்ஷ்டக்காரனாக - உன்
நேசக் குறுந்தகவல்கள்
எனது கைபேசியில்
வரும்போதெல்லாம் !
- பாரதியான், ஆர்.ஆர்.நகர் .

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.