வேண்டுகின்றேன் தாயே!
தாயே ! தாயே ! தாயே !
தமிழே ! தமிழே ! தமிழே !
தலைவணங்குகிறேன் உன்னை
தயைகூர்ந்து அருள்வாயே அம்மா
நினைவெல்லாம் உன் இனிமை சுரக்க
நிற்காமல் மனதினிலே கவிதை மழை பொழிய
என்னுதிர உறவுகளின் மனங்களிலே என்றும்
என் அன்னை உன் மொழியின் பெருமை துலங்க
வண்ண சொற்களைக் கோர்த்து இங்கே
வாசமிக்க கவிதை மாலை கட்டி மகிழ
வையகத்தின் வானமென பரந்திருக்கும்
விஞ்சி நிர்கும் மொழியெந்தன் மொழியே
ஆழி பல கடந்து என் அன்னைமொழி புகழ்
அழியாத ஒளியாய்த் திகழ்ந்திருக்க
அள்ளி அள்ளி நான் எடுத்துக் கவிதைகளாய்
தெளித்து மகிழ்ந்திருக்க அருள் வேண்டும் அம்மா !
கன்னியரும் காளையரும் பல காதல் கதை பேசி
காலாச்சார வரம்புக்குள் காதல் மழை பொழிய
கண்டதில்லை பிரபஞ்சத்தில் தமிழ்மொழிக்கிணையாக
களித்திருப்பேன் நானும் தமிழ்க்கடலில் மூழ்கி
என் கதை முடியும் நேரம் வரை
என் கைகவழி தமிழ் ஆராய் பெருகிட வேண்டி
என் அன்னைத் தமிழின் பாதங்களில்
என் சிரந்தாழ்த்தி வேண்டுகின்றேன் தாராய் தாயே !
- சக்தி சக்திதாசன், லண்டன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.