மனநிறைவுடன்...
உன் உயிர் காக்க
வருபவன்
இன்னுயிராய் உனக்கு
என்றும் இருப்பான்…
இறைவனிடம் கேட்பேன்
என்றும் உனக்காக
பிரார்த்தனைகள் கோடி...
உலகத்தில்
எங்கேனும்
அழைத்துச் செல்வான்...
உனக்கென ஒரு பெயர்
சொல்லி அழைப்பான்...
உனை மட்டும்
தன் நெஞ்சத்தில்
நிறைத்து வைப்பான்..
உனக்காய் அவன்
என்றும் எங்கும்
உழைப்பான்…
தனக்கென ஓருயிர்
நீயென்பான்...
தாதவிழ் பூவினில்
வண்டாவான்..
திருக்கரம் கொண்டு உனைத்
தாங்கிடுவான்...
நீ அவன் முதல் சேய்
என்றிடுவான்...
இன்னும் உனக்காய்
ஆறேழினைக் கொடுத்திடுவான்…
உனை என்றுமே இன்பத்தில்
திளைக்கச் செய்வான்…!!
உன் முகம் கண்டு
தினமும் மலர்ந்திடுவான்...
உன் சிரிப்பினில்
தன்னுயிர்உடல் மறந்திடுவான்...
அழகே உந்தன்
நகைச்சுவையில்
அயர்வுகள் அனைத்தையும் கடந்திடுவான்...
ஆடைகள் உன்னுடன்
துவைத்திடுவான்...
சமையல்கள் உனக்காய்
செய்திடுவான்..
சமயம் பார்த்து
தலை கோதி விடுவான்...
தோழி என்றும் நீவாழ
பாடல் இது உனக்காக..
-சம்பூர் சனா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.