இருளில் நான்! இதயத்தில் நீ!
அன்பே!
உன் கண்னை சிறிதுநேரம்
மூடிக்கொள்!
அப்போது தெரியும் இருளில் தான்
என் வாழ்க்கை பயணம்…
சென்றுகொண்டுஇருக்கிறது…
விளக்கில்லா வீட்டில் படிக்கும்
போதுகூட தெரியவில்லை
இந்த கொடுமை…
இப்போது அனுபவிக்கிறேன்…
உன் கைவிரல் பிடித்துக்
கொண்டு சென்ற பாதை
முடியுறா பாதையாக வேண்டும்
என்றல்லவா வேண்டினேன்
உன்னிடம்…நான் கேட்டதை
கொடுத்தாய்...இப்பொழுது
புரிந்தது - என் பாதை
எங்கு சென்று முடிகிறது என்று
கூட தெரியவில்லை…எனக்கு!
போதுமடி இந்த உலகம்
உன்னை பார்த்த பின்பு
ஏற்பட்ட இதய சுடர்
இன்று என் இதய கல்லறையில்
அணையா விளக்காய்…
- மு.சந்திரசேகர், இராஜபாளையம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.