சொல்ல முடியாமல்...
கண்ணில் நிழலாடுகிறது
கால தச்சன் துப்பி வைத்த
எச்சிலாக
ஆங்காங்கே நரைகள்
கைத்தடி இன்னொரு கையாக
ஆகிப்போனது
தோளின் சுருக்கங்கள்
முதுமையை காட்டித் தருகிறது
எங்கிருந்தோ வந்து
தலையில் அடித்துச் சென்றது
அண்டங்காக்கை
எங்கோ மழை பெய்கிறது
காற்றின் ஈரப்பதம்
தேகத்துக்கு இதம் தருகிறது
மரண தேவதையை
தழுவிக்கொள்ள
மனம் ஆயத்தமாகிறது
இறப்புக்குப் பின்
இருந்தாலும் பிரச்சனையில்லை
இல்லாமல் போனாலும் கவலையில்லை
கண்டு பிறருக்கு
சொல்ல முடியாமல் போனதேயென்று
தான் மனம் சங்கோஜப்படும்.
- ப. மதியழகன், மன்னார்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.