திரை
வெப்பக்காற்று
உடலை உஷ்ணம் செய்கிறது
வேறு எங்கு செல்ல முடியும்
இந்தக் கோடையில்
கல் எறியாதீர்கள்
தியானத்திலிருக்கும் குளம்
விழித்துப் பார்க்கும்
சிற்றலைகள் எழும்பி
அடங்கும் வரை
பாதங்களை வருடும்
இந்த அலைகள்
பாம்பு போல் விழுங்கும்
மனித உயிர்களை
உச்சி வெயில்
தலை சுற்றுகிறது
இன்னும் அதிக தூரம்
போக வேண்டியிருக்குமோ
மயானத்திற்கு
கண்ணாடி முன்பு
நின்று விடாதே
உன் அழகைப்
பருகிவிடும்
ஆயுளில்
ஒரு தடவையேணும்
இறைமை
எட்டிப் பார்த்திருக்கிறதா
உனக்கு
பழுத்த இலைகளின் மீது
மழை விழும் சப்தம்
இயற்கை இன்னும்
உயிர்ப்புடன்...
- ப. மதியழகன், மன்னார்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.