ஒருவர் பிறந்த திதிக்கேற்ப அம்மனுக்கு ஏற்ற உணவைப் படைத்து வழிபடுவதுடன், அதன் ஒரு பகுதியைத் தானமாக வழங்கினால் அவருடைய துன்பங்கள் அனைத்தும் நீங்கி மன மகிழ்ச்சி பெறுவதுடன், அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.
1. பிரதமை - நெய் படைத்து வழிபடவேண்டும்.
2. துவிதியை - சர்க்கரை படைத்து வழிபடவேண்டும்.
3. திருதியை - பால் படைத்து வழிபடவேண்டும்.
4. சதுர்த்தி - பட்சணம் படைத்து வழிபடவேண்டும்.
5. பஞ்சமி - வாழைப் பழம் படைத்து வழிபடவேண்டும்.
6. சஷ்டி - தேன் படைத்து வழிபடவேண்டும்.
7. சப்தமி - வெல்லம் படைத்து வழிபடவேண்டும்.
8. அஷ்டமி - தேங்காய் படைத்து வழிபடவேண்டும்.
9. நவமி - நெற்பொறி படைத்து வழிபடவேண்டும்.
10. தசமி - கருப்பு எள் படைத்து வழிபடவேண்டும்.
11. ஏகாதசி - தயிர் படைத்து வழிபடவேண்டும்.
12. துவாதசி - அவல் படைத்து வழிபடவேண்டும்.
13. திரயோதசி - கடலை படைத்து வழிபடவேண்டும்.
14. சதுர்த்தசி - சத்துமாவு படைத்து வழிபடவேண்டும்.
15. பௌர்ணமி / அமாவாசை - பாயசம் படைத்து வழிபடவேண்டும்.
அதன் பிறகு, படைத்த பொருளின் ஒரு பகுதியைத் தானமாக வழங்கிடலாம்.