நாள்தோறும் இராகு, எமகண்டம், குளிகை நேரங்களை அறியக் கீழ்க்காணும் எளிய வழியினைப் பின்பற்றலாம்.
ராகு காலம்
தினந்தோறும் ராகுவால் ஆளப்படுகின்ற 1.30மணி நேரமே ராகுகால நேரம் என அழைக்கப்படுகிறது. இந்த நேரம் கெட்ட நேரமாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இந்த ராகு காலத்தைக் கணக்கிடக் கீழ்க்காணும் வாக்கியத்தை நினைவில் கொள்ளலம்.
“திருவிழா சந்தையில் வெண் புட்டு விற்கச் சென்றான் ஞானம்”
ராகு காலம் முதலில் ஆரம்பிப்பது திங்கட்கிழமையாகும்.
* திங்கள் - காலை 7.30 – 9.00 மணி
* சனி - 9.00 – 10.30 மணி
* வெள்ளி - 10.30 – 12.00 மணி
* புதன் - மதியம் 12.00 – 1.30 மணி
* வியாழன் - 1.30 – 3.00 மணி
* செவ்வாய் - 3.00 – 4.30 மணி
* ஞாயிறு - 4.30 – 6.00 மணி
எமகண்டம்
எமகண்ட நேரம் 1.30 மணி. இதுவும் கெட்ட நேரமாகவேக் கருதப்படுகிறது. எமனுக்கு ஏற்ற நேரம். இவர் குருவின் புதல்வர் ஆவதால் வியாழக்கிழமையையே முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு பின்னோக்கிக் கிழமைகளைப் புதன், செவ்வாய், திங்கள், ஞாயிறு, சனி, வெள்ளி என்று நினைவில் வைத்துக் கொண்டால் எமகண்ட நேரம் சரியாக இருக்கும்.
* வியாழன் - காலை 6.00 - 7.30 மணி
* புதன் : 7.30 – 9.00 மணி
* செவ்வாய் : 09.00 – 10.30 மணி
* திங்கள் : 10.30 – 12.00 மணி
* ஞாயிறு : மதியம் 12.00 – 1.30 மணி
* சனி : 1.30 – 3.00 மணி
* வெள்ளி : 3.00 – 4.30 மணி
இராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் சுபச் செயல்களை நீக்க வேண்டும். குளிகை காலத்தில் அசுபச் செயல்களை நீக்க வேண்டும்.
குளிகை
குளிகை காலத்தின் அளவு 1.30 மணி நேரம். குளிகன் என்பவர் சனியின் மைந்தன். குளிகை காலம் ஆரம்பிப்பது முதலில் சனிக்கிழமை, பின்பு மற்ற நாட்களைப் பின்னோக்கினால் சனிக்குப் பின், வெள்ளி, வியாழன், புதன், செவ்வாய், திங்கள், ஞாயிறு என்று கணக்கில் கொள்ளவும். குளிகை காலமும் கெட்ட நேரமாகும். இதில் ஆரம்பிக்கும் எந்த செயலும் முற்றுப் பெறாது. மீண்டும் தொடரும் என்று கருதப்படுகிறது.
* சனி - காலை 6.00 – 7.30 மணி
* வெள்ளி - 7.30 – 9.00 மணி
* வியாழன் - 9.00 – 10.30 மணி
* புதன் - 10.30 – 12.00 மணி
* செவ்வாய் - மதியம் 12.00 – 1.30 மணி
* திங்கள் - 1.30 – 3.00 மணி
* ஞாயிறு - 3.00 – 4.30 மணி