*நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் சக்திகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் வாஸ்து சாஸ்திரம் காலம், நாடு, மதத்திற்கு அப்பாற்பட்டது.
*தென்மேற்கு (கன்னிமூலை) உயர்ந்தும், ஈசான்யம் தாழ்ந்தும் இருக்க வேண்டும் என்பது வாஸ்துவின் அடிப்படை விதியாகும்.
*மேற்குத் திசை உயரமாகவும், கிழக்குத் திசை பள்ளமாகவும், இருந்தால் செல்வந்தராக்கிவிடும்.
*அதிகமான சக்தியைப் பெற ஈசானியம் தாழ்ந்திருக்க வேண்டும். ஈசானியம் வளர்ந்திருக்க வேண்டும்.
*அதிகமான உயிர்ச்சக்தி பெற தென்மேற்கு (கன்னி மூலை) உயந்திருக்க வேண்டும்.
*தெற்கு உயரமாகவும், வடக்கு பள்ளமாகவும், இருந்தால் செல்வ வளர்ச்சியைக் கொடுக்கும்.
*மனைகளில் சதுர வடிவம் கொண்டவை கோயில்களுக்கு ஏற்றவை, செவ்வகம், மற்ற வடிவ மனைகள் இதர வகையான கட்டிடங்களுக்கு ஏற்றவை.
*மனையின் ஈசானிய மூலை தவிர, மற்ற மூலைகள் வளர்ச்சியடையக் கூடாது. கன்னிமூலை மட்டத்திற்கு இருப்பது சரியான அமைப்பாகும்.
*கிழக்கு மேடாகவும், மேற்கு பள்ளமாகவும் இருந்தால் ஏழையாக்கிவிடும், தரித்திரம் ஏற்படும்.
*வடக்கு மேடாகவும், தெற்கு பள்ளமாகவும் இருந்தால், வீட்டுத் தலைவனுக்கு மிகத் தீயதைக் கொடுக்கும். கண்டங்கள் ஏற்படும்.
*ஈசான்யம் உயரமாகவும், கன்னி மூலை பள்ளமாகவும் இருந்தால் பல துயரங்களில் ஆழ்த்திவிடும். சந்ததிகளுக்குக் கண்டங்கள் உண்டாகும்.
*அக்னி மூலை மேடாகவும், வாயு மூலை பள்ளமாகவும் இருந்தால், நல்லவை நடக்கும். பெண்களுக்கு ஆரோக்கியம் ஏற்படும்.
*வாயு மூலை மேடாகவும், அக்னி மூலை பள்ளமாகவும் இருந்தால், அவ்வீட்டில் தீ விபத்து, திருட்டு போன்றவை ஏற்படும்.
*கன்னி மூலை உயரமாகவும், ஈசான்யம் பள்ளமாகவும் இருந்தால், மிக்க செல்வ வளர்ச்சியும், புகழும் உண்டாகும். ஆரோக்கியம் கூடும்.
*கிழக்கும், ஈசான்யமும் உயரமாகவும், மேற்கும், தென் மேற்கும் பள்ளமாகவும் இருந்தால், சந்ததி விருத்தி கிடையாது. இருந்தாலும் நோய்களில் ஆழ்த்திவிடும்.
*மழைத் தண்ணீர் மனையிலிருந்து ஈசானியம், தெற்கு அக்கினேயம், மேற்கு வாயுவியம் வழியாக வெளியேற வேண்டும்.
*தெற்குப் பார்த்த மனைகள் வியாபார ஸ்தலங்களுக்கு ஏற்றவை.
*தொழிலுக்கு முக்கியமானது கிழக்குத் திசை. எனவே, கிழக்கில் காலியிடம் இருந்தால், நாம் செய்யும் தொழில் வியாபாரம் நல்ல முறையில் இருக்கும். கிழக்கினை அடைத்து விடக்கூடாது.
*மனையின் வடக்கு, கிழக்குப் பக்க சுற்றுச் சுவர்கள் உயரம் குறைவாக இருக்க வேண்டும்.
*கட்டிடத்தின் தெற்கு, மேற்குப் பக்கம் குறைந்த காலி இடமும், வடக்கு கிழக்குப் பக்கம் அதிக காலி இடமும் விட வேண்டும். இது தான் நல்ல ஸ்தான பலம் கொண்ட அமைப்பாகும்.
*கிணறு, நிலத்தடித் தண்ணீர்த் தொட்டி மனையின் ஈசானிய பாகத்தில் இருக்க வேண்டும்.
*வீட்டின் ஈசான்ய மூலை (வடகிழக்கு) ஈரமாக எப்போதும் இருக்க வேண்டும். கிணறு, போர், தொட்டி போன்றவை ஈசான்யத்தில் அமைக்க வேண்டும். அதில் தண்ணீர் சிறிதளவாவது இருக்க வேண்டும். அப்போது தான் வீட்டில் பணப்புழக்கம் அதாவது பணம் இருந்துகொண்டே
இருக்கும்.
*தெற்குப் பக்கம் கிணறு துர்மரணத்தை உண்டாக்கும்.
*மேற்குப் பக்கம் கிணறு குடும்ப கெளரவத்தைப் பாதிக்கும்.
*கன்னிமூலை கிணறு உடல் நலனைப் பாதிக்கும்.
*தண்ணீர் தொட்டியின் மேல் நடக்கக் கூடாது.
*வீட்டிற்கு அருகில் கோவில்கள் 150 அடிக்கு மேல் இருந்தால், தோஷங்கள் இல்லை. கோபுரத்தின் நிழல் வீட்டின் மேல் விழக்கூடாது.
*மனையில் கிழக்கு, வடக்கு பக்க காலி இடத்தில் உயரமாக வளரக் கூடிய மரங்களை வளர்க்கக் கூடாது. சுற்றுச்சுவரின் உயரத்திற்கு மேல் செடிகள் இருக்கக் கூடாது.
*வீட்டின் அருகில் வளர்க்க வேண்டிய மரங்கள், மாமரம், வாழை, வேப்பமரம், எலுமிச்சை, மல்லிகைப் பூச்செடி, போன்றவை, இவை மனதிற்கு உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும், விஷக் காற்றுகளைத் தடுத்து உதவி செய்யும்.
*வில்வமரம், அகத்திச் செடி, மிளகு, இலுப்பை மரம், அவுரி, பனைமரம், எருக்கு, எட்டிமரம் போன்றவை வளர்க்கக் கூடாது. லட்சுமி கடாட்சத்தைக் குறைத்துவிடும்.
*மனையில் மேற்கு, தெற்குப் பக்க காலி இடத்தில் உயரமாக வளரக்கூடிய மரங்களை வளர்க்கலாம்.
*தெற்குப் பக்கம் அதிக காலி இடம் பொருளாதார நெருக்கடியை உண்டாக்கும்.
*மேற்குப் பக்கம் அதிக காலியிடம் குடும்ப கெளரவத்தைப் பாதிக்கும்.
*வீட்டிற்கு மேற்கு, தெற்கில் காலியிடம் அதிகம் இருந்தால், கடன் தொல்லைகள் அதிகமேற்படும். அதே போன்று கிழக்கும், வடக்கும் மற்ற திசைகளைவிட உயரமாக இருந்தாலும், கடன் தொல்லை குழந்தைகள் பிரச்சினை, தொழிலில் முடக்கம் உண்டாகும்.
*கிழக்குப் பக்கம் அதிக காலி இடம் விட வேண்டும். கிழக்குப் பக்கம் காலி இடம் விடாமல் எல்லையை ஒட்டி மேற்கு சரிவான கூரை அமைத்துக் கட்டிடம் கட்டினால், அந்த வீட்டிலுள்ள பெண்கள் இளம் வயதில் விதவையாவார்கள். தொழிற்கூடமானால், தொழில் பாதிக்கப்பட்டு, தொழிற்சாலை மூடப்படும்.
*வடக்குப் பக்கம் அதிக காலியிடம் விட வேண்டும். வடக்குப் பக்கம் காலி இடம் விடாமல், எல்லையை ஒட்டித் தெற்கு சரிவான கூரை அமைத்துக் கட்டிடம் கட்டினால், அந்த வீடு பெண்கள் பலம் மிகவும் குறைந்து, விளக்கு ஏற்றும் பெண் இல்லாத வீடாக அமையும். தொழிற்கூடமானால், தொழிலாளர், நிர்வாகி உறவு கெட்டு, தொழில் நஷ்டமடையும்.
*கன்னி மூலையில் கட்டிடம் கட்டினால், தெற்கு மேற்குப் பக்க காலி இடத்தின் தீய தன்மையைக் குறைக்கும்.
*மனையின் ஈசானிய மூலையில் எந்தவிதமான கட்டிடமும் இருக்கக் கூடாது. ஈசானியம் மூடப்பட்டுவிடும்.
*ஈசான்ய திசையில் உள்ள காம்பவுண்ட் சுவரினை எக்காரணம் கொண்டும் வளைக்கக் கூடாது. அது குழந்தைகளுக்குக் கண்டத்தை உண்டாக்கும். தலைவனின் வளர்ச்சியைப் பாதிக்கும்.
*வெளிப்பக்கச் சமையலறை, அக்கினி, வாயு மூலையில் இருக்கலாம்.
*சுற்றுச் சுவரில், ஒரு பக்கத்தில் மூன்று வாசல் வைக்கக்கூடாது.
*மனை எந்தப் பக்கம் பார்க்கிறதோ, அந்தப் பக்கம் தான் தலைவாயிலை வைக்க வேண்டும்.
*மனையின் கிழக்கு அல்லது வடக்குப் பக்கம் கூடுதல் இடம் சேர்க்கலாம்.
*தெற்கு, மேற்குப் பக்கம் கூடுதல் இடம் சேர்த்தால் தீமையுண்டாகும்.
*ஆற்றின் தென்புறம் வீடு இருந்தால் அமோக வாழ்வு உண்டாகும்.
*வடக்கு, கிழக்குப் பக்க முன்பகுதி கூரையைவிடத் தாழ்வாக இருக்க வேண்டும்.
*கிழக்கு, வடக்குப் பக்கம் அதிகளவு சன்னல்கள் வைக்க வேண்டும்.
*மேற்கு, தெற்குப் பக்கம் குறைந்த அளவு சன்னல்கள் மட்டும் இருந்தால் போதும்.
*கன்னி மூலையில் சன்னல்கள் வைக்கக் கூடாது. எந்த அறையிலும் கன்னிமூலையிலிருந்து 3 அடி தள்ளி சன்னல் வைக்க வேண்டும்.
*கதவு, சன்னல்களின் எண்ணிக்கை மொத்தம் இரட்டைப்படையில் இருக்க வேண்டும்.
*கான்கிரீட் தூண்கள், உத்திரங்கள் இரட்டைப் படையில் இருக்க வேண்டும்.
*ஈசானிய அறையில் வடக்கு அல்லது கிழக்குப் பக்கம் அவசியம் கதவு வைக்க வேண்டும்.
*பூசையறை வீட்டின் பிரம்மஸ்தானத்தில் இருப்பது மிகவும் நல்லது.
*பூசை அறையின் மேல் மாடியில் கழிவறை இருக்கக் கூடாது.
*மாடிக் கட்டிடத்தில், தரை தளத்தில்தான் பூசை அறை இருக்க வேண்டும்.
*படுக்கையறை வழியாக பூசையறைக்குச் செல்லக் கூடாது.
*படுக்கையறை வீட்டின் தெற்கு, மேற்கு, கன்னிமூலை இருக்க வேண்டும்.
*தெற்குப் பக்கம் படுக்கையறை நல்ல உடல்நலத்தைக் கொடுக்கும்.
*கன்னிமூலையில் படுக்கையறை பெரியவர்களுக்கு ஏற்றது.
*மேற்குப் பக்கம் படுக்கையறை நன்மக்கட்பேறை உண்டாக்கும்.
*வாயுவியத்தில் படுக்கையறை மன சஞ்சலத்தை உண்டாக்கும்.
*ஈசானியத்தில் படுக்கையறை ஊனமுற்ற குழந்தைகளை உருவாக்கும்.
*கிழக்குப் பக்கம் படுக்கையறை பெண்குழந்தைகளை உருவாக்கும்.
*அக்கினியில் படுக்கையறை பெண்களின் உடல்நலனைப் பாதிக்கும்.
*படுக்கையறையில் தெற்கு, மேற்கு சார்ந்தாற் போல கட்டில்களைப் போட வேண்டும்.
*வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது.
*கூரை உத்திரத்துக்குக் கீழ் படுக்கக் கூடாது.
*வீட்டின் அக்கினி, வாயு மூலையில் கழிவறை அமைத்துக் கொள்ளலாம்.
*ஈசானியம், கன்னிமூலை கண்டிப்பாக கழிவறை இருக்கக் கூடாது.
*கழிவறையில் தெற்கு அல்லது வடக்குப் பார்த்து அமர்ந்து தான் உபயோகப்படுத்த வேண்டும்.
*கழிவறையில் கிழக்குப் பார்த்து அமர்ந்தால் கடவுள் நிந்தனை உண்டாகும்.
*குளியலறையில் கிழக்குப் பார்த்துத் தான் குளிக்க வேண்டும்.
*சமையல் அறை அக்கினியில்தான் இருக்க வேண்டும்.
*கிழக்கு, தெற்குப் பார்த்த வீட்டில் வாயுவியத்தில் சமையல் அறை இருக்கலாம்.
*சமைக்கும்போது, கிழக்குப் பார்த்துத்தான் சமைக்க வேண்டும்.
*சமையலறையில் பாத்திரம் கழுவும் தொட்டி, ஈசானிய மூலையில் வைக்க வேண்டும்.
*கன்னிமூலையில் துளசிச் செடி பெண்கள் வாழ்வை வசந்தமாக்கும்.
*சமையல் அறையில் அலமாரி மேற்கு, தெற்கு சுவர்களை ஒட்டி அமைக்க வேண்டும்.
*சமையலறை கதவுக்கு நேர் எதிரில் அடுப்பு வைக்கக் கூடாது.
*தெற்குப் பார்த்து சமையல் செய்வது தற்கொலை உணர்வைத் தூண்டும்.
*மேற்குப் பார்த்து சமையல் செய்வது தீ விபத்தை உண்டாக்கும்.
*வடக்குப் பார்த்து சமையல் செய்வது துர்மரணத்தை உண்டாக்கும்.
*படிப்பறை கிழக்குப் பக்கம் இருக்க வேண்டும்.
*அலமாரி கிழக்கு அல்லது வடக்குப் பார்த்து இருக்க வேண்டும்.
*பூசையறையில் அலமாரி பணம் வருவதும் போவதுமாக இருக்கும். பணம் தங்காது.
*அக்கினியில் அலமாரி பணம் அக்கினியில் கரைவதைப் போல செலவாகும்.
*வாயுவியத்தில் அலமாரி அமைத்தால், வரவுக்கு அதிகமான செலவை உண்டாக்கும்.
*மேல்நிலைத் தண்ணீர் தொட்டி மேற்கு, தெற்கு சார்ந்தாற்போல் இருக்க வேண்டும்.
*ஈசானியத்தில் கண்டிப்பாக மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டி அமைக்கக் கூடாது.குடும்ப கெளரவத்தைக் கெடுக்கும்.
*பிரம்மஸ்தானத்தில் மாடிப்படி மற்றும் மேல்நிலைத் தண்ணீர்த்தொட்டி குடும்ப கெளரவத்தைப் பாதிக்கும்.
*கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வீட்டின் தரையைவிடத் தாழ்வாக இருக்க வேண்டும்.
*ஈசானியத்தில் மாடிப்படிகளை அமைக்கக் கூடாது.
*மாடிப்படிக்குக் கீழ் கடவுள் படங்களை வைத்து வழிபடக்கூடாது.
*தந்தையின் வீட்டைப் பாகப் பிரிவினை செய்யும்போது, மூத்தவர்களுக்கு மேற்குப் பாகத்தையோ, அல்லது தெற்குப் பகுதியையோ கொடுக்க வேண்டும். இளையவர்களுக்குக் கிழக்கு அல்லது வடக்குப் பகுதிகளில் கொடுக்க வேண்டும்.
*மேற்குத் திக்கிலுள்ள சுவர் வெடிக்குமானால் வர்த்தகத்தில் நஷ்டமடைவான். உட்பக்கமாகக் கட்டடச் சுவர் விழுமானால் வீட்டுச் சொந்தக்காரன் நாசமடைவான்.
*வாசம் செய்யும் வீட்டில் திடீரென்று கிழக்குச் சுவரில் வெடிப்பு உண்டானால், அந்த வீட்டில் வசிப்பவர்கள் தரித்திரமடைவார்கள்.
*தெற்கில் உள்ள சுவர்களில் வெடிப்புக் கண்டால் அந்த வீட்டில் யாராவது மரணமடைவார்கள்.
*வடக்கில் உள்ள சுவரில் வெடிப்பு உண்டானால் திடீர் விரயங்கள் உண்டாகும்.
*வீடுகளுக்குத் தாழ்வாரம் ஐந்தரை அடிக்குக் குறையாமல் அமைக்க வேண்டும்.
*குடியிருப்பதற்காகக் கருங்கல்லில் கட்டடங்கள், வீடுகள் கட்டக்கூடாது. அது குடும்பத்தில் பல பிரச்சனைகளைக் கொடுத்துக் குடும்பத்தில் நிம்மதியைக் குலைத்துவிடும்.
*ஏற்கனவே இடம் அல்லது வீடு வைத்திருப்பவர்கள் தங்கள் வீட்டை ஒட்டியோ அல்லது இடத்தை ஒட்டியோ உள்ள வடக்கு அல்லது கிழக்கில் உள்ள வீடு, மனை வாங்கலாம். தெற்கு, மேற்கு கூடாது.
*வீடுகள், எந்தத் திசையில் வாசல் இருந்தாலும், வெளியில் இருக்கும் தெரு மட்டத்தை விட வீட்டுத் தளம் உயரமாக இருக்க வேண்டும்.
*பிரதான வாசல்களை விட மற்ற உள்வாசல் கால்கள் கொஞ்சம் சிறிதாக உள்ளடக்கமாக இருக்க வேண்டும்.
*வீட்டின் கழிவு நீர் ஈசான்யத்தில் வெளியேற வேண்டும். இல்லையெனில், கழிவுநீர் ஈசான்யத்தில் ஒரு சின்னத் தொட்டியில் விழுமாறு செய்து, பின்பு அங்கிருந்து தனியே வாட்டம் கொடுத்து மற்ற திசைகளில் கொண்டு செல்ல வேண்டும்..