எந்தெந்த நட்சத்திர நாட்களில் நோய்கள் உண்டாகின்றன என்பதைக் கொண்டு, அந்த நோய் குணமாகுமா? அது குணமாவதற்கு எத்தனைக் காலம் பிடிக்கும் என்று சில கணிப்புகளை ஜோதிட சாஸ்திரம் விவரிக்கிறது. அவை;
1. அஸ்வினி : 25 நாட்களில் குணமாகும்.
2. கார்த்திகை : 5 அல்லது 7 நாட்களில் குணமாகும். இல்லையெனில் 21 அல்லது 27 நாட்களுக்குள் குணமாகிவிடும்.
3. ரோகிணி : 8 அல்லது 11 நாட்களில் குணமாகும்.
4. மிருகசீரிடம் : 6 அல்லது 9 நாட்களில் குணமாகும்.
5. புனர்பூசம் : 13, 15 அல்லது 27 நாட்களில் குணமாகும்.
6. பூசம் : 3 அல்லது 7 நாட்களில் குணமாகும்.
7. பூரம்: 7 நாட்களில் குணமாகும்.
8. உத்திரம் : 8, 9 அல்லது 21 நாட்களில் குணமாகும்.
9. அஸ்தம் : 7 அல்லது 20ஆம் நாளில் குணமாகும்.
10. சித்திரை : 8 அல்லது 27ஆம் நாளில் குணமாகும்.
11. சுவாதி : 10 அல்லது 45 நாட்களில் குணமாகும்.
12. மூலம் : 10 அல்லது 27 நாட்களில் குணமாகும்.
13. பூராடம் : 6 அல்லது 9 நாட்களில் குணமாகும் அல்லது 8 முதல் 9 மாதங்கள் வரை ஆகலாம்.
14. திருவோணம் : 8 நாட்களில் குணமாக வாய்ப்பு உண்டு. எனினும் முழுமையாக பிணியிலிருந்து விடுபட ஒரு வருட காலம் பிடிக்கும்.
15. சதயம்: 13 நாட்களில் குணமாகும்.
16. உத்திரட்டாதி: 14 நாட்களில் குணம் ஆகும். அல்லது பல வருடங்கள் அந்தப் பிணியால் துன்பம் அடைய நேரிடும்.
17. ரேவதி : 8, 14 அல்லது 27 நாள்களில் குணமாகும்.
பிணிகள் தொடங்கிய சரியான நட்சத்திர நாளை அறிந்தால்தான், மேற்சொன்ன பலன்களைக் கணிக்கமுடியும்.
ஆயில்யம், பரணி, கேட்டை, பூரட்டாதி, விசாகம், மகம், திருவாதிரை, அனுஷம் ஆகிய எட்டு நட்சத்திர காலத்தில் தோன்றும் பிணியானது உடலை மிகவும் வருத்தும். இவற்றுள் சில நட்சத்திர தினங்களில் உருவாகும் நோய் மரணத்தையும் ஏற்படுத்தலாம்.