பெண்கள் எந்த நாளில் பூப்டைந்தால் என்ன பலன்?
ஞாயிற்றுக் கிழமை
இந்நாளில் பூப்படைவது நல்லதல்ல. தீயைப் பற்றிய பயம் இருக்கும். அடிக்கடி மன நெருக்கடி உருவாகும்.
திங்கட்கிழமை
எதிர்காலம் நன்றாக இருக்கும்.
செவ்வாய்க்கிழமை
பிரச்சனைகள் ஏற்படும். தாம்பத்திய வாழ்வில் சிரமம் ஏற்படும். கசப்பான அனுபவங்கள் ஏற்படும்.
புதன் கிழமை
கல்வி மற்றும் செல்வச் சிறப்புகள் ஏற்படும். திருமண வாழ்க்கை நன்றாக அமையும்.
வியாழக் கிழமை
மாங்கல்ய பலம் வாய்க்கப்பெறுவர். வாழ்க்கையில் கல்வியில் வேலையில் உயர்ந்த நிலையை அடைவார்கள்.
வெள்ளிக்கிழமை
புத்திரபாக்கியம், தன லாபம் கிடைக்கும். பதிபக்தியுடன் இருப்பர்.
சனிக்கிழமை
இவர்கள் வாழ்வில் நிறையும், குறையும் கலந்து வரும்.
இந்தப் பலன்கள் மேலோட்டமான பலன்களே. பெண்கள் பூப்படைந்த நேரம், நட்சத்திரம், ராசிகளுக்கேற்ப பலன்களில் சில மாறுபாடுகள் ஏற்படும் என்பதால் அதையும் சேர்த்துக் கணித்துப் பயன்பெறலாம்.
- வயல்பட்டி கண்ணன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.