Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

விவேகானந்தரை வியக்க வைத்த ஜோதிடர்

கவிஞர் பாரதன்


இந்து மதம் என்பது மூடத்தனங்களைக் கொண்ட மதம் என்று வெளிநாட்டவர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் இருந்த படித்தவர்களும் கூட நம்பிக் கொண்டிருந்த நிலையில், அதை உடைத்தெறிந்து அதன் உன்னதத்தை, உண்மைக் கூறுகளை உலகறிய உணர்த்தி, அதை உயர்த்திப் பிடித்த பெருமை வீரத்துறவி விவேகானந்தருக்கே உரியது.

அந்த மாமனிதரையேத் தன் அதிசய ஆற்றலால் வியப்படைய வைத்த ஒரு மனிதர் தமிழகத்தில் இருந்தார். அந்த விந்தை மனிதரின் பெயர் கோவிந்த செட்டியார்.

அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், கும்பகோணம் பகுதியில் உள்ள சிற்றூர் வலங்கைமான். அங்குள்ள 'பாடைகட்டி மாரியம்மன்' கோவிலால் இன்றும் அந்த ஊர் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

அதென்ன பாடைகட்டி மாரியம்மன்? என்று தானே கேட்கிறீர்கள்...

அதாவது, அந்த ஊரிலிருக்கும் பாடைகட்டி மாரியம்மனுக்கு வேண்டுதல் செய்து நலம் பெற்றவர்கள், தாங்கள் இறந்த பின் சவத்திற்குச் செய்யப்படும் அத்தனை கர்ம காரியங்களையும் செய்த பின், பாடையில் படுக்க வைக்கப்படுவார்கள். அப்படிப் படுத்த பின், அவர்கள் ஏறத்தாழ பிணம் போன்று ஆகி விடுகிறார்கள். அந்தப் பாடையை, இறுதிச் சடங்குகள் அனைத்தும் செய்து , இடுகாட்டிற்குக் கொண்டு செல்வது போல மேள தாளங்கள் முழங்கத் தூக்கி வந்து, பாடைகட்டி மாரியம்மன் ஆலயம் முன் வைப்பார்கள். அதன் பின்பு, அந்தக் கோயிலின் பூசாரியோ அல்லது மற்றவர்களோ வந்து வேப்பிலை நீரால் முகத்தில் அடித்த பின் தான், பாடையில் படுத்திருக்கும் நபர் சுய உணர்வு பெற்று எழுவார். இன்றும் அக்கோயிலில் இந்தக் காட்சிகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

இந்த வலங்கைமான் என்ற சிற்றூரில், ஏறத்தாழ 125 ஆண்டுகளுக்கு முன் வசித்து வந்த பிரபலமான ஜோதிடர்தான் கோவிந்த செட்டியார். இவர் ஒரு வித்தியாசமான ஜோதிடர். அவரிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்கள், எதைக் கேட்க வேண்டும்? என்று மனதில் எண்ணிக் கொண்டு வருகிறார்களோ, அதை அவர்கள் முகத்தைப் பார்த்தேக் கூறிவிடுவார். அவர்கள் எண்ணி வந்த செய்தி நடக்கும், நடக்காது என்பதையும் துல்லியமாகச் சொல்லக்கூடிய அதிசய ஆற்றலை அவர் பெற்றிருந்தார். இதனால் அவரது புகழ் எங்கும் பரவி, ஜோதிடம் மூலம் அதிகமாகப் பணம் சம்பாதித்து வந்தார்.


1893 ஆம் வருடம் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். அது அவர் புகழ் பெறாத காலம். இருப்பினும், இந்தியாவில் அவர் பயணம் செய்த இடங்களிலெல்லாம் அவருடைய அறிவாற்றலையும், அருளாற்றலையும் அறிந்த மன்னர்கள், பேராசிரியர்கள் எனப் பலர் அவரைப் போற்றத் தொடங்கியிருந்தார்கள். இவர்களில் வடநாட்டில் 'கேத்ரி ' மன்னர் முக்கியமானவர். தமிழகத்தில் ராமநாதபுரம், பாஸ்கர சேதுபதி , சென்னை பச்சையப்பன் பள்ளி முதல்வர் அளசிங்கப் பெருமாள், மருத்துவர் நஞ்சுண்டராவ் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

தமிழகச் சுற்றுப் பயணத்தின்போது, கோவிந்த செட்டியாரின் ஆற்றல் பற்றி அறிந்த சுவாமி விவேகானந்தர், அவரைப் பரிசோதித்து உண்மையை அறிய விரும்பினார். பிறர் மனதில் ஓடும் எண்ணங்களை அறியும் ஆற்றல் உடையவரை ஆங்கிலத்தில் Mind Reader என்று அழைப்பார்கள். பலர் ஜோதிடம் என்பதைப் பிழைப்பாக வைத்து ஏமாற்றி வந்ததால், கோவிந்த செட்டியாரைப் பற்றி நேரில் சென்று உண்மையை அறிய விரும்பினார் விவேகானந்தர். தன் குருவான பகவான் ராமகிருஷ்ணரையேப் பரிசோதித்து உண்மை அறிந்த பின் ஏற்றுக் கொண்டவரல்லவா விவேகானந்தர். எனவேக் கோவிந்த செட்டியாரைப் பரிசோதித்து உண்மையை அறிய அவர் எண்ணியதில் வியப்பில்லை. இரண்டு நண்பர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு அவர் வலங்கைமானுக்கு வந்தார்.

அங்கு வரும் முன்பே, தனது மனதில் கேட்க வேண்டிய கேள்விகளை விவேகானந்தர் வரிசைப்படுத்தி வைத்துக் கொண்டார். முதல் கேள்வி அவரது தாயார் குறித்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு விவேகானந்தருக்குத் தனது தாயார் அகால மரணம் அடைந்தது போல ஒரு கனவு வந்திருந்தது. அது அவருக்குத் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது. எனவே, தனது தாயார் பற்றிய எண்ணத்தை முதல் கேள்வியாக மனதில் பதிய வைத்துக் கொண்டார்.

இரண்டாவது கேள்வி என்ன தெரியுமா? தனது குருநாதரான இராமகிருஷ்ண பரமஹம்சர் தனக்குப் போதித்த உண்மைகள் எந்த அளவு சாத்தியமாகி நடைமுறைக்கு வரும்? இது தனது உள்ளத்தில் அவர் பதித்துக் கொண்ட இரண்டாவது கேள்வி.

மூன்றாவதாகத் தன் மனதில் அவர் அமைத்துக் கொண்டது, திபெத்திய மொழியில் உள்ள ஒரு புத்தமத மந்திரம்.

இவை மூன்றும், கோவிந்த செட்டியாரைச் சந்திப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, அவர் தனது மனதில் எழுதி வைத்துக் கொண்டவை. தனது நண்பர்களிடம் கூடத் தான் என்ன கேட்கப் போகிறோம் என்பதைக் கூறாமல், தன்னோடு அழைத்து வந்திருந்தார் விவேகானந்தர்.

தன்னுடன் வந்த இரண்டு நண்பர்களுடன் கோவிந்த செட்டியாரை முதன்முதலாகச் சந்தித்தார் விவேகானந்தர். ஆனால், அவர் சந்தித்த வேளையில் ஜோதிடரின் முகம் பல நாள் காய்ச்சலில் அடிபட்டவர் முகம் போலக் களையிழந்து, கருத்துப்போய் இறுக்கமாக இருந்தது . வந்தவர்களைப் பார்த்தும் பார்க்காதது போல அவர் இருந்தார்.


விவேகானந்தருடன் வந்த நண்பர் ஒருவர் ஜோதிடரிடம், தாங்கள் ஆருடம் பார்க்க வந்திருப்பதைத் தெரிவித்தார். ஜோதிடரோ " சற்று நேரத்திற்கு முன் மைசூர் திவானும் அவருடன் சில ஐரோப்பியக் கனவான்களும் வந்தார்கள். அவர்களால் எனக்குத் திருஷ்டி தோஷமும் காய்ச்சலும் ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் தற்போது உள்ள நிலையில் உங்களுக்கு ஆருடம் கூற முடியாது" என்று கூறிவிட்டார்.

ஆனால், சற்று நேரத்தில் மனம் மாறிய கோவிந்த செட்டியார், " நான் உங்களைத் திருப்பி அனுப்ப விரும்பவில்லை. எனக்குச் சேவைக் கட்டணமாக 10 ரூபாய் கொடுக்கச் சம்மதித்தால் உங்களுக்கு ஆருடம் கூறுகிறேன்" என்றார். (1893 இல் பத்து ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை) விவேகானந்தரும் அவரது நண்பர்களும் ஜோதிடர் கேட்ட பணத்தைக் கொடுக்கச் சம்மதித்தார்கள்.

உடனே தனியறைக்குச் சென்ற ஜோதிடர் விவேகானந்தரை மட்டும் தனது அறைக்குள் வரும்படி அழைத்தார். அங்கு சென்ற விவேகானந்தரிடம், "சுவாமி , எனது காய்ச்சலைக் குணப்படுத்த வேண்டும். அதற்கு நீங்கள் உங்கள் கையால் எனக்குத் திருநீறு பூசி விட வேண்டும்" என்றார் ஜோதிடர்.

விவேகானந்தர் அவரிடம், " ஐயா, நான் தங்களிடம் ஆருடம் கேட்க வந்திருக்கிறேன். உங்களைக் குணப்படுத்தும் அதீத ஆற்றல்கள் எதுவும் என்னிடம் இல்லை" என்றார்.

விவேகானந்தரின் பேச்சில் குறுக்கிட்ட கோவிந்த செட்டியார், "சுவாமி, உங்களிடம் நான் வேண்டியது திருநீறு மட்டும்தான். அது என்னைக் குணப்படுத்தும்” என்றார்.

விவேகானந்தரும், செட்டியாரின் வற்புறுத்தலைத் தொடர்ந்து அவருடைய கோரிக்கைக்குச் சம்மதம் தெரிவித்து, திருநீறு பூசி விட்டார். அதைத்தொடர்ந்து தெளிவடைந்த ஜோதிடர், விவேகானந்தருடன் வந்த இரண்டு நண்பர்களையும் தனது அறைக்குள் அழைத்துக் கொண்டார். அதோடு ஒரு வெள்ளைக் காகிதத்தில் ஏதோ எழுதி, அந்த நண்பர்களில் ஒருவரது சட்டைப்பையில் அந்தக் காகிதத்தை வைத்தார்.

பின் சிறிது நேரம் பேசாமல் அமைதி காத்த ஜோதிடர், அதன்பின் விவேகானந்தரிடம் பேசத் துவங்கினார்.

" சுவாமி நீங்கள் இன்னமும் ஏன் தங்கள் தாயாரைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்?"

விவேகானந்தர், "ஐயா, துறவியான ஆதிசங்கரரும் கூடத் தனது அன்னையின் நலனில் அக்கறை கொண்டவராக இருந்தார். நான் என் தாயார் குறித்து எண்ணுவதில் என்ன தவறு?" என்றார்.

அதற்கு ஜோதிடர், " கவலை வேண்டாம். உங்களது அன்னை நலமாக இருக்கிறார். உங்கள் அன்னையின் பெயரை முன்பே எழுதி உங்கள் நண்பரிடம் கொடுத்து இருக்கிறேன் " என்றார்.

தன் பேச்சைத் தொடர்ந்த ஜோதிடர், விவேகானந்தர் நினைத்து வைத்திருந்த இரண்டாவது எண்ணத்தையும் அதற்கான பதிலையும் கூறத் துவங்கினார்.

" உங்களது குரு மகா சமாதி அடைந்து விட்டார். அவரது உபதேசங்களை நீங்கள் நிச்சயமாக நிறைவேற்றியேத் தீரவேண்டும். நிறைவேற்றுவீர்கள்"

அதைக்கேட்ட விவேகானந்தர் ஜோதிடரிடம், "எனது குருவின் திருநாமம் என்னவென்று கூறினால் நான் மிகவும் திருப்தி அடைவேன்" என்றார்.

கோவிந்த செட்டியார், "உங்கள் குருவுக்குப் பல திருநாமங்கள் உள்ளன. அதில் எந்தப் பெயரினைக் குறிப்பிட வேண்டும்?” என்று கேட்டார்.

"பொதுமக்கள் எல்லாம் எந்தப் பெயரினால் அவரை அழைக்கிறார்களோ அந்தப் பெயரைக் கூறுங்கள் " என்றார் விவேகானந்தர்.

ஜோதிடர் "அப்படியா; அந்தப் பெயரை உங்கள் நண்பரின் சட்டைப்பையில் உள்ள காகிதத்தில் முன்பே எழுதி வைத்திருக்கிறேன். பார்த்துக் கொள்ளுங்கள் " என்றார்.

தன் பேச்சைத் தொடர்ந்த ஜோதிடர், " மூன்றாவதாக நீங்கள் மனதில் குறித்து வைத்திருக்கும் திபெத்திய மொழியில் உள்ள புத்த மந்திரத்தையும் உங்கள் நண்பரின் சட்டைப்பையில் உள்ள காகிதத்தில் எழுதி இருக்கிறேன்" என்றார்.

வியப்படைந்த விவேகானந்தர் அவரோடு உரையாடலைத் தொடர்ந்தார். அப்போது கோவிந்த செட்டியார் "சுவாமி, நீங்கள் ஏதாவது ஒரு மொழியில் அமைந்த சொல் ஒன்றை இப்போது மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்" என்றார். விவேகானந்தரும் தனது மனதில், "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்ற சமஸ்கிருத மந்திரத்தை நினைத்துக் கொண்டார். " நீங்கள் மனதில் நினைத்ததை என்னிடம் கூறுங்கள்" என்றார் ஜோதிடர். விவேகானந்தரும் ஜோதிடரிடம் தன் மனதில் நினைத்த மந்திரத்தைக் கூறினார்.

ஜோதிடர் " நீங்கள் இப்போது மனதில் நினைத்துக் கொண்ட மந்திரத்தையும் அப்போதே உங்கள் நண்பரிடம் கொடுத்திருக்கும் காகிதத்தில் எழுதி இருக்கிறேன். வேண்டுமானால் இப்போதே அந்தக் காகிதத்தை எடுத்து நான் கூறியது சரியா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்" என்றார்.

விவேகானந்தர் தன்னுடன் வந்த நண்பரின் சட்டைப்பையில் இருந்த காகிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தார். ஜோதிடர் கூறிய படியே, விவேகானந்தர் தன் மனதில் நினைத்திருந்த அத்தனையும் அப்படியே எழுதப்பட்டிருந்தன.

விவேகானந்தரின் தாயார் பெயர் புவனேஸ்வரி என்பது காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அடுத்து, விவேகானந்தரின் குரு இராமகிருஷ்ண பரமஹம்சர் என்பதும், அவர் மகா சமாதி அடைந்து விட்டார் என்பதும், எனினும் அவர் சூட்சம நிலையில் விவேகானந்தரைக் கவனித்து வருகிறார் என்பதும் எழுதப்பட்டிருந்தது. மூன்றாவதாக விவேகானந்தர் நினைத்த திபெத்திய மொழியில் உள்ள புத்த மத மந்திரமான " லாமாலா காப் சேகவா" என்பதும் சரியாக எழுதப்பட்டிருந்தது. கடைசியாக, உரையாடும் போது கூறிய, "ஓம் பகவதே வாசுதேவாயா " என்ற மந்திரச் சொல்லையும் ஒரு மணி நேரம் முன்னதாகவே ஜோதிடர் காகிதத்தில் எழுதி வைத்திருந்தார்.

விவேகானந்தர் வியப்பின் எல்லைக்கேச் சென்று விட்டார் . மன வலிமை மிக்கத் தன் மனதை ஊடுருவிப் பார்த்ததோடு மட்டுமில்லாமல், ஒரு மணிநேரத்திற்குப் பின் தனக்குத் தோன்றப் போகிற மந்திரச் சொல்லையும் முன்கூட்டியே எழுதுவது என்றால் அது அதிசயமான ஆற்றல்தானே?

கோவிந்த செட்டியாரைப் பாராட்டி விட்டு விடை பெற்றார் விவேகானந்தர்.


இந்த அதிசய நிகழ்ச்சி குறித்து விவேகானந்தர் தனது நண்பரான ' கேத்ரி ' மன்னருக்கு 15- 2 -1893 அன்று ஒரு கடிதம் எழுதி, அதில் நடந்த நிகழ்ச்சிகள் அத்தனையையும் விலாவாரியாக விவரித்திருந்தார். இந்தக் கடிதமும் விவேகானந்தர் மன்னருக்கு எழுதிய மற்றொரு கடிதமும் 'கேத்ரி' அரண்மனையில் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம்தான் இந்த அரிய செய்தி வெளியுலகிற்குத் தெரிய வந்தது.

இதைவிட வியப்பான ஒரு நிகழ்ச்சி விவேகானந்தர் , ஜோதிடர் இருவரிடையேயும் நடந்த மற்றொரு சந்திப்பில் நடந்தது.

மேற்கூறிய நிகழ்ச்சிக்குப் பின் அமெரிக்கா சென்ற விவேகானந்தர், சிகாகோ சர்வமத சபையில் பேசி உலகப்புகழ் பெற்றார். அதன்பின் இந்தியா திரும்பிய அவர் 1897 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக கும்பகோணம் நகருக்கு வருகை புரிந்தார். அப்போது அங்கே நடந்த கூட்டமொன்றில் அவர் வேதாந்தம் குறித்து உரை நிகழ்த்தினார்.

அந்தக் கூட்டத்தில், தான் முன்பு சந்தித்த ஜோதிடரான கோவிந்த செட்டியார் இருப்பதை விவேகானந்தரின் கூரிய கண்கள் கண்டு பிடித்துவிட்டன. சொற்பொழிவிற்கிடையே ஜோதிடருக்குச் சைகை காட்டி , தன்னைத் தனியேச் சந்திக்கும்படி தெரிவித்தார்.

அதேபோல, விவேகானந்தர் சொற்பொழிவாற்றி முடித்தபின், ஜோதிடர் வந்து விவேகானந்தரைச் சந்தித்தார்.

அவரை வரவேற்று உபசரித்த விவேகானந்தர் அவரிடம், "ஐயா, உங்களுக்கு அற்புதமான சக்திகள் இருக்கின்றன. அதன் மூலம் உங்களுக்குப் பேரும் புகழும், செல்வமும் கிட்டுகின்றன. ஆனால், நீங்கள் ஆன்மீகத்தில் ஒரு அடிகூட முன்னேறவில்லையே, எங்கே தொடங்கினீர்களோ அந்த இடத்திலேயேதான் நிற்கிறீர்கள். கடவுளை நோக்கி உங்கள் மனம் சிறிதளவு கூடச் செல்லாமல் இருக்கிறதே. இது சரியா?" என்றார்.

இதுவரை தனக்கிருந்த அதிசய ஆற்றலைப் பணத்திற்கும் புகழுக்கும் மட்டும் பயன்படுத்தி வந்த கோவிந்த செட்டியாரின் உள்ளத்தில் விவேகானந்தர் எழுப்பிய கேள்வி சாட்டையடியாக வந்து விழுந்தது. அது அவருடைய அகக்கண்களைத் திறந்து விட்டது. மறுநொடியே அவர் சுவாமி விவேகானந்தரின் காலில் விழுந்து வணங்கி, " சுவாமி என் தவறை உணர்ந்து கொண்டேன் . என்னைக் கடைத்தேற்றுங்கள்" என்று வேண்டிக் கொண்டார்.

உடனே அவரைக் கட்டித் தழுவிக் கொண்ட விவேகானந்தர் அவரிடம், "கடவுளை அடையத் தடையாக உங்களிடம் இருந்த அனைத்தும் இப்போது முதல் நீக்கப்பட்டு விட்டன" என்று கூறி வாழ்த்தி அருளினார்.

அந்த நொடி முதல் கோவிந்த செட்டியாரிடம் இருந்த சிறப்புகள் அத்தனையும் அவரிடம் இருந்து மறைந்துவிட்டன. அன்றுமுதல் இறைவனைக் காணும் ஏக்கம்தான் அவருக்கு உண்டாகியிருந்தது. கடவுளைக் காணவேண்டும், அவன் திருவடியை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் உள்ளத்தில் இருத்திக் கொண்டு சேவை செய்ய ஆரம்பித்தார்.

இந்த நிலையை அடைந்த பின் பழைய அதிசய ஆற்றல் கோவிந்த செட்டியாரிடம் திரும்பியது. இருப்பினும், அதைப் பணத்திற்கும் புகழுக்கும் பயன்படுத்தாமல் இறைச் சேவையாக மட்டும் செய்து வந்தார் செட்டியார்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/general/p122.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License