நட்சத்திரத் தாரைகள் மற்றும் அதி தேவதைகள்
உ. தாமரைச்செல்வி

உங்கள் நட்சத்திரம் எதுவோ அதற்கு அடுத்த நட்சத்திரம் வரும் நாட்களிலும், அந்த நட்சத்திரத்தின் அனு ஜென்ம மற்றும் திரி ஜென்ம நட்சத்திர நாளிலும், உங்களுக்குப் பணம் வரும் விஷயங்கள் எதுவானாலும் முழுமையான வெற்றியைத் தரும்.
அனு ஜன்மம், திரி் ஜென்மம் நட்சத்திரங்கள் என்றால் என்ன?
உதாரணமாக, இங்கு அஸ்வினி நட்சத்திரத்தை எடுத்துக் கொள்வோம். அஸ்வினி நட்சத்திரத்துக்கு அடுத்த நட்சத்திரம், அதாவது இரண்டாவது நட்சத்திரம் “பரணி.” இந்தப் பரணியின் அனு ஜென்ம நட்சத்திரம் “பூரம்” நட்சத்திரம். திரி ஜென்ம நட்சத்திரம் “பூராடம்”. இந்தப் பரணி, பூரம், பூராடம் இந்த மூன்று நட்சத்திரங்களும் அஸ்வினி நட்சத்திரத்துக்கு சம்பத்து தாரை நட்சத்திரங்களாகும்.
மேலும் இந்த பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்திற்கான அதிதேவதையை வணங்கி வந்தால் செல்வ வளம் பெருகும். செல்வவளம் குறையாமல் இருக்கும். மன நிறைவான வாழ்க்கையாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையாமல் இருக்கும்.
ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் சம்பத்து தாரை நட்சத்திரங்கள் எவை? அதி தேவதைகள் எவை? என்பதை அறிந்து கொள்வதற்கான பட்டியல் இது.
அஸ்வினி
பரணி (துர்கை), பூரம் (பார்வதி), பூராடம் (வருணன், ஜம்புகேஸ்வரர்)
பரணி
கார்த்திகை (அக்னி), உத்திரம் (சூரியன்), உத்திராடம் (கணபதி)
கார்த்திகை
ரோகிணி (பிரம்மா), அஸ்தம் (சாஸ்தா), திருவோணம் (விஷ்ணு)
ரோகிணி
மிருகசீரிடம் (சந்திரன்), சித்திரை (விஷ்வகர்மா), அவிட்டம் (அஷ்டவசுக்கள்)
மிருகசீரிடம்
திருவாதிரை (நடராஜர்), சுவாதி (வாயு), சதயம் (எமதர்மன்)
திருவாதிரை
புனர்பூசம் (அதிதி), விசாகம் (முருகர்), பூரட்டாதி (குபேரன்)
புனர்பூசம்
பூசம் (குரு), அனுசம் (லட்சுமி), உத்திரட்டாதி (காமதேனு)
பூசம்
ஆயில்யம் (ஆதிசேஷன்), கேட்டை (இந்திரன்),ரேவதி (சனி)
ஆயில்யம்
மகம் (பித்ருக்கள், சுக்ரன்), மூலம் (நிருதி வாயு) அஸ்வினி (சரஸ்வதி)
மகம்
பூரம் (பார்வதி), பூராடம் (வருணன்), பரணி (துர்கை)
பூரம்
உத்திரம் (சூரியன்), உத்திராடம் (கணபதி), கார்த்திகை (அக்னி)
உத்திரம்
அஸ்தம் (சாஸ்தா), திருவோணம்(விஷ்ணு), ரோகிணி (பிரம்மா)
அஸ்தம்
சித்திரை (விஷ்வகர்மா), அவிட்டம் (அஷ்ட வசுக்கள்), மிருகசீரிடம் (சந்திரன்)
சித்திரை
சுவாதி (வாயு), சதயம் (எமதர்மன்), திருவாதிரை (நடராஜர்)
சுவாதி
விசாகம் (முருகன்), பூரட்டாதி (குபேரன்), புனர்பூசம் (அதிதி)
விசாகம்
அனுசம் (லட்சுமி), உத்திரட்டாதி (காமதேனு), பூசம் (குரு)
அனுசம்
கேட்டை (இந்திரன்), ரேவதி (சனி), ஆயில்யம் (ஆதிசேஷன்)
கேட்டை
மூலம் (நிருதி), அஸ்வினி (சரஸ்வதி), மகம் (பித்ருக்கள்)
மூலம்
பூராடம் (வருணன்), பரணி (துர்கை), பூரம் (பார்வதி)
பூராடம்
உத்திராடம் (கணபதி), கார்த்திகை (அக்னி), உத்திரம் (சூரியன்)
உத்திராடம்
திருவோணம் (விஷ்ணு), ரோகிணி (பிரம்மா), அஸ்தம்( சாஸ்தா)
திருவோணம்
அவிட்டம் (அஷ்டவசுக்கள்), மிருகசீரிடம் (சந்திரன்), சித்திரை (விஷ்வகர்மா)
அவிட்டம்
சதயம் (எமதர்மன்), திருவாதிரை (நடராஜர்), சுவாதி (வாயு)
சதயம்
பூரட்டாதி (குபேரன்), புனர்பூசம் (அதிதி), விசாகம் (முருகன்)
பூரட்டாதி
உத்திரட்டாதி (காமதேனு), பூசம் (குரு), அனுசம் (லட்சுமி)
உத்திரட்டாதி
ரேவதி (சனி), ஆயில்யம் (ஆதிசேஷன்), கேட்டை (இந்திரன்)
ரேவதி
அஸ்வினி (சரஸ்வதி), மகம் (பித்ருக்கள்), மூலம் (நிருதி)
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|