திருமணத்திற்கு நாள் குறிக்கப் போகிறீர்களா?
திருமணத்திற்கு நாள் குறிப்பவர்கள் கீழ்க்காணும் குறிப்புகளைக் கவனத்தில் கொள்ளலாம்.
1. திருமணம் ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி வரும் மல மாதத்தில் இடம் பெறக்கூடாது.
2. சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. முடிந்தவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது.
4. புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.
5. ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும்.
6. துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது நல்லது.
7. முகூர்த்த லக்கினத்துக்கு ஏழாம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
8. அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசர யோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக் கூடாது.
9. திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக் கூடாது.
10. திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமானது.
11. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக் கூடாது.
12. கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக் கூடாது.
- சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.