வீடு கட்டுவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே போன்று புதுமனைக்குச் செல்லும் நாளையும் தேர்ந்தெடுக்க வேண்டும். புதுமனை செல்வதற்கு ஏற்ற மாதங்கள், நாட்கள், திதி, நட்சத்திரங்கள் மற்றும் லக்கினம் ஆகியவற்றை அறிந்து செயல்பட வேண்டும்.
புதுமனை செல்ல ஏற்ற மாதங்கள்
1. சித்திரை
2. வைகாசி
3. ஐப்பசி
4. கார்த்திகை
5. தை
புதுமனை செல்ல ஏற்ற நாட்கள்
1. திங்கட்கிழமை
2. புதன்கிழமை
3. வியாழக்கிழமை
4. வெள்ளிக்கிழமை
புதுமனை செல்ல ஏற்ற நட்சத்திரங்கள்
1. அசுவினி
2. ரோகினி
3. மிருகசீரிடம்
4. புனர்பூசம்
5. பூசம்
6. மகம்
7. உத்திராடம்
8. உத்திரட்டாதி
9. அஸ்வதம்
10. சுவாதி
11. அனுஷம்
12. மூலம்
13. திருவோணம்
14. அவிட்டம்
15. சதயம்
16. ரேவதி
புதுமனை செல்ல ஏற்ற லக்கினங்கள்
1. ரிஷபம்
2. மிதுனம்
3. கன்னி
4. விருச்சிகம்
5. கும்பம்
பொருத்தமான மாதம், கிழமை, திதி, நட்சத்திரம், லக்கினம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து புதுமனை சென்றால் அங்கு வாழ்பவன் மேலும் நல்ல செல்வத்தையும், சிறப்பான உடல் நலத்தையும் பெற்று பெருவாழ்வு வாழ்வான் என்கிறது ஜோதிட நூல்கள்.