யோகங்கள் என்பது குறிப்பிட்ட ஸ்தானங்களில் குறிப்பிட்ட கிரகங்கள் சேர்ந்திருப்பதாகும். யோகம் என்பது சுப/அசுப பலன்களைத் தர வல்லது. சில யோகங்கள், கிரகங்கள் சாதாரண முறையில் சேர்ந்திருப்பதாலும், மற்ற சில யோகங்கள் அதே கிரகங்கள் பிரத்யேகமான ஸ்தான அமைப்புகளுடன் கூடியிருப்பதாலும் ஏற்படுகின்றன. இவையே ஒருவருடைய எதிர்கால வாழ்க்கை நிலைகளை குறிப்பிடுகின்றன.
பழமையான ஜோதிட நூல்கள் நூற்றுக்கு மேற்பட்ட கிரக சேர்க்கைகளையும் அதன் பலன்களையும் விவரிக்கின்றன. சிலவற்றை நல்ல யோகங்களாகவும் மற்றும் சிலவற்றை தீய யோகங்களாகவும் தெரிவிக்கின்றன.
ஒருவன் பிச்சை எடுப்பதிற்கு ஒரு யோகம் (கிரக கூட்டு) வேண்டும் . இதுவும் ஒரு வகை யோகமே. யோகம் என்பது சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்துவது, அனுபவிப்பது, பணப்புழக்கம் அதிகம் இருப்பது, உயர் நிலையில் இருப்பது மேலும் புகழ் பெற்றவர்களாக இருப்பது போன்ற அனைத்திற்கும் சுப பலனைத் தரக்கூடிய கிரகக் கூட்டு இருப்பதே காரணம் என்கிறது ஜோதிடம்.
கிரகங்கள் கூட்டாக நின்று தரக்கூடிய சில யோகங்கள்;
·
1. அகண்ட சாம்ராஜ்ய யோகம்
2. அம்சவதார யோகம்
3. அமலா யோகம்
4. அயத்தின தனலாப யோகம்
5. அர்த்த சந்திர யோகம்
6. அனபா யோகம்
7. ஆதி யோகம்
8. இந்திர யோகம்
9. இஷு யோகம்
10. கட்கதி யோகம்
11. கவுரி யோகம்
12. களத்திர மூலதன யோகம்
13. கஜகேசரி யோகம்
14. காந்தர்வ யோகம்
15. காஹள யோகம்
16. குசும யோகம்
17. குட யோகம்
18. குலவர்தன யோகம்
19. சக்தி யோகம்
20. சங்க யோகம்
21. சச மஹா யோகம்
22. சசி மங்கள யோகம்
23. சதா சஞ்சார யோகம்
24. சதுஸாகர யோகம்
25. சந்திர யோகம்
26. சமுத்திர யோகம்
27. சரஸ்வதி யோகம்
28. சரீர சவுக்கிய யோகம்
29. சாத்திர யோகம்
30. சாப யோகம்
31. சாப யோகம்
32. சாமர யோகம்
33. சிரீநாத யோகம்
34. சிவ யோகம்
35. சுனபா யோகம்
36. தண்ட யோகம்
37. தன யோகம்
38. திரிலோசன யோகம்
39. துருதுரா யோகம்
40. தேக புஷ்டி யோகம்
41. தேவேந்திர யோகம்
42. நவ யோகம்
43. நள யோகம்
44. நீசபங்க யோகம்
45. பத்திர யோகம்
46. பர்வத யோகம்
47. பஹுதிரவியார்ஜன யோகம்
48. பாஸ்கர யோகம்
49. பிரம்ம யோகம்
50. புத யோகம்
51. மங்கள யோகம்
52. மருத் யோகம்
53. மஹாலட்சுமி யோகம்
54. மாத்ரு மூலதன யோகம்
55. மாளவிய யோகம்
56. முசல யோகம்
57. யுப யோகம்
58. ரவி யோகம்
59. ரஜ்ஜு யோகம்
60. ராஜலட்சண யோகம்
61. ருசக யோகம்
62. லட்சுமி யோகம்
63. வசுமதி யோகம்
64. வித்யுத் யோகம்
65. ஜய யோகம்
66. ஹம்ச யோகம்